காந்தி ஜெயந்தி: டிவிட்டரில் நடிகர் கமல்ஹாசன் புகழாரம்!
நம் தேசப் பிதா மகாத்மா காந்தியின் 148-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காந்தியின் கருத்துக்களை எடுத்துரைக்கும் வண்ணம், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் காந்தியை நினைவு கூறும் வகையில் பதிவிட்டுள்ளார். அதில், முதலில் நம்மை ஒதுக்குவார்கள், பின்னர் நம்மை பார்த்து நகைப்பார்கள். இதையடுத்து நம்மிடம் சண்டையிடுவார்கள். அதன் பின்னரே நாம் வெற்றியடைவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
காந்தியின் இந்த வார்த்தைகள் அளிக்கும் நம்பிக்கை, தற்போதைய சூழலுக்கு மிகவும் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.