கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா மந்தானா, தமிழில் நடிகர் கார்த்தி ஜோடியாக அறிமுகமாவதாக தகவல் வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘தேவ்’ படத்துக்கு பிறகு ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார். கதாநாயகியே இல்லாத இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நரேன், ரமணா, ஜார்ஜ் மரியான் நடிக்கின்றனர். இதனை தொடர்ந்து ‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணன் இயக்கவிருக்கும் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.


கார்த்தி ஜோடியாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தானா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.