நடிகர் விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் இம்மாதம் திரைக்கு வர உள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இதன் சூட்டிங் அண்மையில் தான் நிறைவடைந்தது. ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டியிருந்த நிலையில், சூட்டிங் நிறைவடைந்த காட்சிகளுக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தப் படத்தை சரவணன் இயக்கியுள்ளார். யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ’தேள்’  சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய தமிழ் தொலைக்காட்சி


இந்தப் படத்திற்குப் பிறகு துப்பறிவாளன் 2 மற்றும் லத்தி ஆகிய படங்கள் விஷால் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர காத்திருக்கின்றன. இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ என்ற புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளார். படத்தின் பெயரே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், இப்படத்தில் அடுத்தடுத்து மிகப்பெரிய ஸ்டார்கள் இணைந்து வருகின்றனர். வில்லனாக இப்போதைக்கு மோஸ்ட் வாண்ட்டாக இருக்கும் எஸ்.ஜே சூர்யா நடிக்க உள்ளார்.



இந்நிலையில், படக்குழு புதிய அப்டேட்டை இன்று ரிலீஸ் செய்துள்ளது. அதாவது மார்க் ஆண்டனி திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார். மார்க் ஆண்டனி, என்ற பெயர் ஷேக்ஸ்பியர் நாவல் முதல் ரஜினி நடிப்பில் ப்ளாக் பஸ்ட்ர் ஹிட் அடித்த பாஷ்சா படம் வரை என எல்லா காலத்திலும் மிக பிரபலமான பெயராக இருந்து வருகிறது. அந்தப் பெயருடன் விஷாலின் புதிய படம் உருவாவது, கதை மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


ALSO READ | முத்தையா முரளிதரனின் பயோபிக்கில் விஜய் சேதுபதிக்கு பதிலாக இவரா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR