நீண்ட எதிர்பார்ப்பில் உள்ள அஜித்தின் வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக உள்ளது.  2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் கொரோனா சூழ்நிலை காரணமாக தள்ளிப் போனது.  இதனால் படக்குழுவின் சார்பில் ரசிகர்களுக்கு சரியான நேரத்தில் எந்த ஒரு அப்டேட்ம் தர முடியாமல் போனது.  இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | கௌதம் மேனனின்  'ஜோசுவா இமை போல் காக்கா' படத்தின் ட்ரைலர் வெளியானது!


தற்போது ரிலீஸ் தேதி அறிவித்தலிருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் ரசிகர்களுக்கு வந்து கொண்டே உள்ளது.  சமீபத்தில் வெளியான வலிமை படத்தின் இரண்டு பாடல்கள், தீம் மியூசிக், கிலிம்ஸ் என ஒவ்வொன்றும் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்குகிறது.  அடுத்தபடியாக வலிமை படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. 



இந்நிலையில் வலிமை படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் பற்றி இயக்குனர் வினோத் தெரிவித்துள்ளார்.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஒரு பைக் ரேஸ்ருக்கு நேரடியாக SI பதவி வழங்கினார்.  இதனை மையமாக வைத்து வலிமை படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.  மேலும் வலிமை கதை பல வருடங்களுக்கு முன்பு நான் எழுதியது, அஜித் சார் இந்த படத்திற்குள் வந்ததற்குப் பிறகு அவருக்காக சில மாற்றங்கள் செய்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.  வலிமை படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்-வினோத் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளது. இந்த படத்தினை விரைவில் எடுத்து 2022ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


ALSO READ | Valimai big update: வரும் வாரத்தில் வலிமை ட்ரெய்லர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR