தென்னிந்திய திரைத்துறையில் முக்கிய கதாயகியாக அவதாரம் எடுத்துள்ள ஹன்சிகா மோட்வானி, தனது 50-வது திரைப்படமான மஹா-வின் Firstlook போஸ்டரினை வெளியிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது இயல்பான நடிப்பால், திரையில் தோன்றும் நம் வீட்டு பெண்னை போன்று அனைவரின் மனதிலும் பதிந்துள்ள ஹன்சிகா தற்போது மஹா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முதல்பார்வை போஸ்டரினை தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். 


அறிமுக இயக்குநர் UR  ஜமீல் இத்திரைப்படத்தினை எழுதி இயக்குகின்றார். சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் இத்திரைப்படம் உருவாகிறது என தெரிகிறது. கருணாகரன், தம்பி ராமையா ஆகியோர் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தினை ஏற்பதாக தெரிகிறது. 



இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ள முதன்மை ஆண் கதாப்பாத்திரம் மற்றும் வில்லன் கதாப்பாத்திரம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. படத்தின் பெரும்பான்மை காட்சிகள் சென்னை ECR-ல் செட் அமைத்து படமாக்கப்படும் எனவும், மீதமுள்ள காட்சிகள் மதுரையில் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடல் காட்சிகளுக்கு ஐரோப்பா நாட்டில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.


இப்படத்திற்கு வாகை சூடவா புகழ் ஜிப்ரான் இசையமைக்கின்றார். இத்திரைப்படம் இவரது 25-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.