தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பலருடன் நடித்த அவர் மிகப்பெரும் ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் சிம்புவுடன் காதலில் விழுந்தார். ஆனால், அவர்களது காதல் சில காலத்திலேயே முறிவை சந்தித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து ஹன்சிகாவுக்கும் பட வாய்ப்புகள் குறைந்தன. அதேபோல் தனது உடல் எடையையும் குறைத்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்துவந்தார்.


https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/silambaraasa.png


அவர் தற்போது மஹா எனும் படத்தில் நடித்திருக்கிறார். குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து ஜமீல் என்பவர் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.


மேலும் படிக்க | காதல் முகம் மட்டுமல்ல ; வேறு முகங்களும் நா.முத்துக்குமாருக்கு உண்டு!


ஜூலை 22ஆம் தேதி மஹா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. நீண்ட நாள்கள் கழித்து ஹன்சிகா மோத்வானி நடித்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. இச்சூழலில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், ஹன்சிகா, ஆரி, சீனுராமசாமி, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



விழாவில் பேசிய ஹன்சிகா மோத்வானி, “மஹா படத்தை எனது 50ஆவது படம் என்று நான் நினைக்கவில்லை. அதேசமயம் இந்தப் படம் எனது 50ஆவது படமாக அமைந்தது மகிழ்ச்சி. இப்படத்தில் நடிப்பதற்கு என்னுடைய தாய்தான் முக்கியக் காரணம். நீ 50ஆவது படமாக மஹாவில்தான் நடிக்க வேண்டுமென்று கூறினார்.


 



சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதற்கு சிம்புவுக்கு ஒரே ஒரு ஃபோன் கால்தான் செய்தேன். அவர் உடனடியாக படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து நடித்துக்கொடுத்தார். அவர் மஹாவில் நடித்ததற்காக நான் கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.


மேலும் படிக்க | ’குட்டி குஷ்பூ’ ஹன்சிகா எடுத்த முடிவால் ரசிகர்கள் ஹேப்பி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ