Parking Movie Review: ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம் எஸ் பாஸ்கர், இளவரசு ஆகியோர் நடித்துள்ள பார்க்கிங் படம் இந்த வாரம் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி இன்று நடைபெற்றது. சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஸ்ரீநிஷ் தயாரித்துள்ளனர். பார்க்கிங் படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஞானவேலின் பின்னால் சூர்யா, கார்த்தி? தக்கபதிலடி கொடுத்த கரு பழனியப்பன்!


சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது மனைவி இந்துஜாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஹிந்துஜா கர்ப்பமாக இருக்க புதிதாக ஒரு வீட்டிற்கு குடி பெயர்கின்றனர். அந்த வீட்டின் அடித்தளத்தில் அரசு ஊழியரான எம்எஸ் பாஸ்கர் தனது மனைவி மற்றும் மகளுடன் 10 வருடங்களாக அதே வீட்டில் வசித்து வருகிறார். கர்ப்பமாக உள்ள தனது மனைவியை வெளியில் அழைத்துச் செல்ல சிரமமாக இருப்பதால் ஒரு புது காரை வாங்குகிறார் ஹரிஷ் கல்யாண். அதனை வீட்டில் நிறுத்தும் போது அவருக்கும் எம்எஸ் பாஸ்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சிறிய பார்க்கிங் பிரச்சனை பின்னாலில் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை சுவாரசியமாக சொல்லி இருக்கும் படம் தான் பார்க்கிங்.



அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் முதல் படத்திலேயே நான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார். அற்புதமான காட்சி அமைப்புகளுடன், சிறந்த நடிகர் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.  இந்தப் படத்தை தாங்கி பிடிப்பது படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தான்.  சாக்லேட் பாய் போல படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் சிறிது வில்லனிஷம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  கோபக்கார இளம் வயது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார், அவரது மனைவியாக வரும் இந்துஜா ஒரு கர்ப்பிணி பெண்ணாக ரசிக்க வைக்கிறார்.  குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு பிரமாதம்.


ஓய்வு பெறப்போகும் ஒரு அரசு ஊழியராக எம் எஸ் பாஸ்கர் மீண்டும் தான் ஒரு எப்பேர்ப்பட்ட நடிகன் என்பதை நிரூபித்துள்ளார்.  எட்டு தோட்டாக்கள் படத்திற்கு பிறகு பார்க்கிங் படத்தின் மூலம் அவருக்கு நிறைய விருதுகள் காத்துக் கொண்டிருக்கிறது.  நிறைய இடங்களில் டயலாக்குகள் இல்லாமல் தனது கண்களாலேயே நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  பார்க்கிங் படத்தில் ஹீரோ வில்லன் என்ற ஒரு நிலையில் கதையை நகராமல் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையில் இருக்கும் ஈகோவால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதை படம் பேசுகிறது. இதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி.


வீடு அலுவலகம் என மொத்தமாக இரண்டு மூன்று இடங்களில் மட்டும் தான் கதை நகர்ந்தாலும் பெரிதாக எங்கும் போர் அடிக்கவில்லை.  தேவையில்லாத பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் இல்லாமல் கதைக்கு தேவையானதை மட்டுமே வைத்துள்ளார் இயக்குனர் ராம்குமார். சென்னை போன்ற பெரு நகரங்களில் பார்க்கிங்கால் சிரமப்படும் பலருக்கும் இந்த படம் நிச்சயம் கனெக்ட் ஆகும்.  கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு பார்க்கிங்கால் இந்த அளவிற்கு பிரச்சனை ஏற்படுமா என்றும் யோசிக்க வைக்கும்.  பெரிதாக லாஜிக் மீறல்கள் இல்லாத இந்த பார்க்கிங் படத்தை நிச்சயம் குடும்பத்தினருடன் கண்டுக்களிக்கலாம்.


மேலும் படிக்க | தர்ஷன் நடித்துள்ள நாடு படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ