ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடங்க மறு படத்திற்கு பிறகு ஜெயம் ரவி, நடித்து வரும் கோமாளி படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி வருகிறார். காமெடி படமான இதில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே யோகி பாபு, கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஐசரி தயாரித்து வரும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். இதில் ஜெயம் ரவி 9 கதாப்பாத்திரங்களில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. பிரிட்டிஷ் காலத்தில் வாழ்ந்த அடிமை, ஆதிவாசி, 1990களில் வாழ்ந்த இளைஞர், ராஜா ஆகிய வேடங்களை உறுதிசெய்த படக்குழுவினர், மீதமுள்ள 5 வேடங்களை ரகசியமாக வைத்துள்ளனர். இதற்காக ஜெயம் ரவி 18 கிலோ எடையை குறைத்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.


ஏற்கனவே கோமாளி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது, இந்த போஸ்டர்களில் 1990, 2000, 2005, 2010, 2013, 2016 ஆகிய ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.