மிஸ்டர் லோக்கல் படத்தின் டீஸர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பரிசாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் திரைப்படம் ‘Mr. லோக்கல்’. சிவகார்த்திகேயன் - நயன்தாரா ஜோடியில் உருவாகிவரும் இத்திரைப்படம், இந்த ஜோடியின் முந்தைய படமான ‘வேலைக்காரன்’ படத்தைப் போல் அபார வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர்களுடன் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.


ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரிக்கிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. 


சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்றுள்ளது. நயன்தாராவின் போர்ஷன் முடிந்துவிட, சிவகார்த்திகேயன் நடிப்பில் சில காட்சிகள் இன்னும் மீதமுள்ளதாக தகவல்கள் தெரவிக்கின்றன. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் மொத்தப் படப்பிடிப்பும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் மே 1-ம் தேதி படம் திரையை எட்டும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். 


இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளன இன்று மிஸ்டர் லோக்கல் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.