விஜய் 61 படத்தின் தலைப்பு, ஃபஸ்ட் லுக் தேதி இதோ
விஜயின் 61 படத்தின் தலைப்பு மற்றும் அந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு வெளியானது.
அட்லி, விஜய் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
விஜய் 61 படத்தின் தலைப்பு குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் வரும் மே 28-ம் தேதிக்கு முன்பு, விஜய்-அட்லி படத்தின் தலைப்பு மற்றும் ஃபஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.