சூர்யாவின் 2டி தயாரிப்பில் உருவாகும் உறியடி-2 படத்தின் சினீக்பிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழில் சாதி அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘உறியடி’ திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது. விஜய்குமார் தயாரித்து, பின்னணி இசையமைத்து, எழுதி, இயக்கி, ஹீரோவாக அறிமுகமான இப்படம் திரையரங்குகளில் பெரிதாக வெற்றி பெறவில்லை. என்றாலும் மானே.... மானே....(ரப்பர் இருக்க) பாடல் பட்டி தொட்டி எல்லாம் பரவி நல்ல வரவேற்ப்பை பெற்றது. 


ஆனால், விமர்சன ரீதியாக மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. இதையடுத்து, படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய்குமாரே இயக்கி நாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா நடித்திருக்கிறார் . விஜய் சேதுபதியின் `96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைப்பதால் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் பாடல்களுக்கான உரிமையை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 


இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் முடிவடைந்தது. மேலும் உறியடி-2 படம்  மே மாதம் 17-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சினீக்பிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த சினீக் பிக் வீடியோ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.