இவைதான் `வேலைக்காரன்` பாடல்களின் பட்டியல்!!
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `வேலைக்காரன்`. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன, நயன்தாரா இணைந்திருக்கும் இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது.
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் "வேலைக்காரன்". மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன, நயன்தாரா இணைந்திருக்கும் இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் வில்லனாக நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் அனிருத்தின் இசையில் உருவான 'இறைவா' என்ற பாடல் ஏற்கனவே சுப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையிலும், இந்த படத்தின் இசை வெளியீடு இன்று நடைப்பெற உள்ள நிலையில், நேற்று மாலை வேலைகாரன் பாடல்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.