நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி உலகம் முழுக்க வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வியாபாரத்தை ஈட்டிவருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து இருந்தார். நடிகர் விஜய் RAW ஏஜெண்டாக நடித்துள்ள இப்படம், ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்யும் பயங்கரவாதக் கும்பலிடமிருந்து கதாநாயகன் மக்களை மீட்டாரா இல்லையா என விவரிக்கும் விதமாக அமைந்திருந்தது.


திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வருகிற மே மாதம் 11ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பீஸ்ட் படம் வெளியாகி சுமார் ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் இப்படத்தின் ஒரிஜினல் க்ளைமாக்ஸ் காட்சிகள் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


                                                                     


மேலும் படிக்க | OTTயில் விஜய்யின் ‘பீஸ்ட்’- லாபமா, நஷ்டமா?


அதாவது பீஸ்ட் க்ளைமாக்ஸ் காட்சியின் தற்போதைய வெர்சனில் பயங்கரவாதிகள் முகாமிட்டுள்ள பகுதியை விஜய் எப்படிக் கண்டறிந்து சென்றார் எனக் காட்டப்படவில்லை.  ஆனால் ஒரிஜினல் வெர்சனிலோ, பயங்கரவாதக் கும்பலிடம் பயிற்சிக்காக வேனில் அழைத்துச் செல்லப்படும் இளைஞர்களுள் ஒருவர் போல நடித்து விஜய் அந்த பயங்கரவாத முகாமைக் கண்டறிவதுபோலத்தான் இருந்ததாம்.



 


ஆனால் நீளம் மற்றும் சுவாரஸ்யம் கருதி அக்காட்சிகள் தவிர்க்கப்பட்டு, விஜய் நேரடியாக பயங்கரவாத முகாமில் தோன்றுவதுபோல படமாக்கப்பட்டதாம். இது தொடர்பான ஸ்டோரிபோர்டு பதிவொன்று இணையத்தில் தற்போது வைரல் ஆகிவருகிறது.


மேலும் படிக்க | 'KGF'- ல நம்ம தினேஷ் கார்த்திக்கா?! - நெட்டிசன்ஸின் வேற லெவல் கண்டுபிடிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR