Nala Damayanthi Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீதாராமன், கார்த்திகை தீபம், மாரி, அண்ணா, சந்தியா ராகம் போன்ற தொடர்களும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளன. அதில், நளதமயந்தி சீரியலும் பரவலான கவனத்தை பெற்றுள்ளது. நளதமயந்தி சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சீரியலில் கடந்த வாரம் நளன் எப்படியாவது தமயந்தியிடம் இருந்து சமையல் செய்யத் தேவையான ரெசிபிக்களை கற்று கொள்ள வேண்டும் என முடிவெடுத்திருந்தார். அந்த நிலையில், வரும் நாட்களில் சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.


மேலும் படிக்க | ஷக்தியை பழி தீர்க்க துடிக்கும் புஷ்பா! மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்


அதாவது, நளன், 'நானே தமயந்தி மெஸ்ஸில் வேலைக்கு போகிறேன்' என முடிவெடுக்கிறான், இதற்காக திட்டம்போட்டபடி பார்க்கில் நளன் படுத்துத் தூங்கினான். அந்த விஷயம் தமயந்திக்கு தெரிய வர நளன் அவளிடம் 'அப்பா வீட்டை விட்டு துரத்தி விட்டார்' என சொல்கிறான். அதற்கு தமயந்தி 'என்னுடைய மெஸ்க்கு வேலைக்கு வறீங்களா' என்று கேட்க நளனும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறான். 


மறுநாள் கோர்ட் சூட்டில் வேலைக்கு வர தமயந்தி, 'நீங்க வேலை செய்ய வந்திருக்கீங்க' என்று டிரஸ் மாத்தி கொண்டு வர வைத்து கையில் மாப் கொடுத்து மெஸ்ஸை துடைக்க வைக்கிறாள், அடுத்ததாக நளன் அவனுடைய ரெஸ்டாரண்ட் வர அங்கு சாப்பிட வந்த தமயந்தியின் தங்கை தோழிகளுடன் செல்பி எடுக்க அதில் நளன் முகமும் தெரிய சோசியல் மீடியாவில் எல்லாரும் நளன் உங்க பாய் பிரண்டா என்று கேட்க தொடங்குகின்றனர். 


இதனால் அவள் நளன் பற்றி விசாரித்து அவனையே காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறாள். அடுத்து தமயந்தி சமைக்க போகும் சமயம் நளன் மசாலாக்களை கீழே தட்டி விட அவள் திரும்பவும் மசாலாக்களை தயார் செய்யும் போது அதை கண்டு பிடித்து விடலாம் என்று பிளான் போட்டு சமைக்கும் இடத்தில் கேமராவை ஆன் செய்து வைக்கிறான். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? தமயந்தியின் சமையல் சீக்ரெட் நளனுக்கு தெரிய வருமா? தமயந்தியின் தங்கையின் காதல் கை கூடுமா? என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே பரபரப்பாக இருக்கும் நளதமயந்தி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 


நளதமயந்தி தொடர் மாதம் 9ஆம் தேதி முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 செயிலி மூலமும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. zeenews.india.com/tamil/movies/watch-zee-tamil-new-serial-nala-damayanthi-promo-video-466518


மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட்ட ரூபஸ்ரீ.. தீபாவுக்கு ஷாக் கொடுத்த கோகிலா
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ