நடிகைகள் என்றாலே சுலபமாக பலரும் விமர்சித்து கலாய்ப்பார்கள். அதிலும் அவர்கள் யார் மீதாவது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை வைத்தால் போதும், உடனே அவர்களது குடும்ப பின்னணியை தேடி எடுத்து மோசமாக பேசி மகிழ்வார்கள். ’மீ டூ’ புகார் தெரிவித்த அத்தனை சினிமா பிரபலங்களும் கேலிக்கு ஆளாக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு கும்பலால் காரில் கடத்தப்பட்டார் பாவனா. படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய அவரை கடத்திய கும்பல் பாலியல் துன்புறுத்தல் செய்து பின்னர் அவரை அப்படியே விட்டுச் சென்றனர். பிறகு இந்த வழக்கில் நடிகர் திலீப்குமார் பழிவாங்கும் எண்ணத்தில் பாவனாவை கடத்தியது தெரியவந்தது. வழக்கின் விசாரணை தொடர்கிறது. தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறார் பாவனா. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பிரேமம் இயக்குநரின் அடுத்த படம் தயார்!


பாவனாவின் அடையாளத்தை மீடியாக்கள் வெளியிட கேரள நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனக்கு நடந்த கொடூரத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் பாவனா. தன்னை பாதிக்கப்பட்டவராக அவர் அடையாளப்படுத்தவில்லை. மாறாக தன்னை போராளியாக உணர வைத்தார். இந்நிலையில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு `வி த வுமன் ஆஃப் ஆசியா' கூட்டமைப்பு நடத்திய `குளோபல் டெளன்ஹால்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாவனா, தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.



அப்போது,``என் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய சம்பவங்கள் நடந்தன. மிகவும் கடினமான பயணத்தை நான் மேற்கொண்டு வருகிறேன். நான் பாதிக்கப்பட்டவள் அல்ல, எனக்கு ஏற்பட்ட அநியாயத்தை எதிர்த்து போராடுபவள். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை நான் போராடுவேன். நீதிக்கான போராட்டம் அவ்வளவு எளிதானது அல்ல. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதுபற்றி விரிவாகக் கூற விரும்பவில்லை. நான் 15 முறை நீதிமன்ற விசாரணைக்காக சென்று வந்தேன். மீண்டும் மீண்டும் அவர்கள் கேட்ட கேள்விகளை நான் கடந்து வந்தேன். நான் நிரபராதி என தெளிவுபடுத்தும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன். என் தந்தை இருந்திருந்தால் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. நான் தொடர்ந்து போராடுவேன்.” எனத் தெரிவித்தார். பாவனாவின் இந்த பேச்சு தற்போது பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. மீண்டு வாருங்கள் பாவனா.


மேலும் படிக்க | 12YearsOfSamantha: சமந்தா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR