பட்டம் எல்லாம் நமக்கு தேவையில்லை- சிவகார்த்திகேயன்
நேற்று நடந்த "அதாகப்பட்டது மகாஜனங்களே" படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் ஒருவர் இளம் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுத்தார்.
தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இன்ப சேகர் இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இமான் இசையில் உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், கே.எஸ்.ரவிக்குமார், பொன்வண்ணன், பேரரசு, எஸ்.வி.சேகர், ஏ.எல்.விஜய், டி.இமான், பிரபு சாலமன், மனோபாலா, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், சிவகார்த்திகேயனை "இளம் சூப்பர் ஸ்டார்" என அழைத்தார். இயக்குநர் பேரரசு பேசும் போது, சிவகார்த்திகேயனை "மக்கள் ஸ்டார்" என பாராட்டினார்.
படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை வெளியிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் போது, பட்டம் எல்லாம் நமக்கு தேவையில்லை. சாதாரண மனிதனாக மக்களை மகிழ்வித்தாலே போதும் என்று பேசினார்.
மேலும் நடிகர் உமாபதி அதிக உயரமாக இருக்கிறார். அவரது உயரத்திற்கு அவர் ஆடும் பாடல் காட்சிகள் ஹிரித்திக் ரோஷனை நியாபகப்படுத்தும்படி இருக்கிறது. அந்த அளவுக்கு அவர் சிறப்பாக நடனமாடி இருக்கிறார் என்று டிரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.