பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள “தேள்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா,  நேற்று திரைபிரபலங்கள் மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள்  முன்னிலையில், சென்னையில் நடைபெற்றது. STUDIO GREEN   நிறுவனம் சார்பில் K.E. ஞானவேல் ராஜா  இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இயக்குநர் A ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவா, ஈஸ்வரி ராவ்  இருவரும் அம்மா,  மகனாக  நடித்துள்ளனர். C.சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவ்விழாவில் பிரபுதேவா கூறியதாவது, இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார்.  இயல்பை விடவும் பலமடங்கு அற்புதமான உழைப்பை தந்துள்ளார். ரசிகர்கள் இது செட்டா இல்லை ஒரிஜினல் லொகேஷனா என சந்தேகப்படும் அளவு அற்புதமாக  கலை இயக்கம் செய்துள்ளார்கள். முழு டப்பிங்கையும் அரை நாளில் முடித்துவிட்டேன். இசையமைப்பாளர் சத்யா எனது பள்ளி கெமிஸ்ட்ரி ஆசிரியரை ஞாபகப்படுத்தினார்.  இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன். நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்து கொண்டே இருப்பார் இயக்குநர். 



மேலும் படத்தின் நடிகை சம்யுக்தா பேசுகையில், இது எனக்கு இரண்டாவது வாய்ப்பு. பிரபு தேவா சாருடன் நடனம் ஆடாமல் வேறெந்த படத்திலும் நடனமாடக்கூடாது என உறுதி எடுத்துள்ளேன். விரைவில் அவருடன் நடனமாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்தப்படத்தில் நடித்தது மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது. இயக்குநர் ஹரிகுமார் பேசுகையில்,  தேள் ஒரு நேரத்தில் 40 குட்டிகளை போடும், அவையனைத்தையும் தன் தோள் மீது வைத்து பாதுகாக்கும். ஆல்கஹால் அதன் மீது ஒரு துளி பட்டாலே இறந்து விடும். மேலும் தேள் கடித்தவர்களுக்கு இதய பாதிப்பு வராது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது போல் பல ஒற்றுமைகள் இப்படத்தின் கதையோடு பொருந்திபோகும் என்று கூறினார்.



ALSO READ மீண்டும் உலகநாயகனுடன் இணையும் நடிகை த்ரிஷா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR