Enemy pre-release Event: விஷால், ஆர்யா நடித்துள்ள எதிரி படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. விழாவை தொடங்கும் முன் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்பொழுது பேசிய நடிகர் விஷால் (Actor Vishal), இந்த நிகழ்ச்சியை நடத்தலாமா வேண்டாமா என்ற இரு எண்ணங்களில் இருப்பதாக உணர்ச்சிவசப்பட்டு பேசினார். 


"புனீத் ராஜ்குமார் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல நண்பரும் கூட. அவரைப் போன்ற ஒரு டவுன் டு எர்த் சூப்பர் ஸ்டாரை (Down to Earth Superstar) நான் பார்த்ததில்லை. பல சமூகப் பணிகளைச் செய்து வந்தார். 


புனித் ராஜ்குமாரிடம் இலவசக் கல்வி (Free Education) பெற்று வரும் 1800 மாணவர்களையும் அடுத்த ஆண்டு முதல் கவனித்துக் கொள்வதாக உறுதியளிக்கிறேன் என்றார்.


ALSO READ |  Puneet Rajkumar Death: இது பிரிந்துசெல்லும் வயதா? கலங்கும் ரசிகர்கள்!!


"எனிமி (Enemy) படத்தின் தயாரிப்பாளராக வினோத்குமார் நினைத்திருந்தால், ஓ.டி.டி.யில் பெரிய விலைக்கு இந்த படத்தை விற்று இருக்கலாம். ஆனால் OTT தளத்தில் வெளியிட மறுத்து திரையரங்குகளில் வெளியிட சம்மதித்த தனது தயாரிப்பாளருக்கு விஷால் நன்றி தெரிவித்தார்.


“இது ஹோம் தியேட்டரிலோ சிறிய திரையிலோ பார்க்க வேண்டிய படம் அல்ல. ஆனந்துடன் (Anand Shankar) இது எனக்கு முதல் படம். அவர் கதையை சொன்னபோது, ​​என் கேரியரில் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்று உணர்ந்தேன். ஆர்யா சரியான தேர்வாக இருப்பார் என்று கூறினேன். ஆர்யாவின் கேரக்டரை படத்தில் அதிகரிக்கச் சொன்னேன்.


இந்த படத்தில் நடிக்க தனது பெயரை பரிந்துரைத்தது விஷால் தான் என்று ஆர்யா (Actor Arya) தெரிவித்துள்ளார். "விஷால் எனக்கு அண்ணன் மாதிரி. படம் நல்ல கதையம்சம் கொண்டது. அது உணர்ச்சிகளைப் பெற்றது. எதிரிகளாக மாறிய நண்பர்களைப் பற்றியது. எதிரிகளாக மாறிய இரண்டு நண்பர்களுக்கு இடையில் நடைபெறும் கதை தான்  சிறப்பாக அமைந்துள்ளது என்றார். 


ALSO READ |  இயக்குனராக அவதாரம் எடுக்கும் தமிழ் சினிமா ஹீரோக்கள் -ஒரு பார்வை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR