தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘இதயம்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதயம் : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பந்தக்கால் நடும் போது ஒருவன் பிரச்சனை செய்ய சரவணன் மற்றும் ஆதி என இருவரும் அவனை அடித்து துரத்திய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


மேலும் படிக்க | கன்னியாகுமரி கோவில்களில் நடிகை நயன்தாரா இன்று சாமி தரிசனம்


 


அதாவது, பாரதி சரவணனிடம் சீக்கிரம் இந்த கல்யாணம் நல்லபடியா நடந்து முடியனும் என்று தனக்குள் இருக்கும் பயத்தை சொல்கிறாள். இதையடுத்து சரவணன் அதெல்லாம் ஒரு பிரச்னையும் இருக்காது, என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கறேன் என்று பேசி கொண்டிருக்க ஆதியும் அங்கு வந்து விடுகிறான். 


அதன் பிறகு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வர ஆதி போய் மேக்கப் போட்டுட்டு வா என்று பாரதியை அனுப்பி வைக்கிறான் ஆதி, மேக்கப் போட வந்தவர்கள் பாரதியை முகத்தை அலம்பி கொண்டு வர சொல்ல பாரதி பாத் ரூம் வர அப்போது வெளியில் யாரோ ஒருவர் போனில் ஆதியோட கதை இன்னையோட முடிந்தது, கேக்கில் விஷத்தை கலந்திருப்பதாக சொல்ல பாரதி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். 


உடனே ஆதியை தேட ஆதியும் கிடைக்காத நிலையில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மேக்கப் போட தொடங்கி விடுகின்றனர். பிறகு ஸ்வேதா அப்பாவிடம் நான் ஒரு திட்டத்தை வச்சிருக்கேன் என்று சொல்ல ஏகாம்பரம் என்ன திட்டம் என்று கேட்க ஸ்வேதா அதை நானே பார்த்துக்கறேன் என்று அங்கிருந்து நகர்கிறான். பிறகு ஏகாம்பரம் அவங்க பிளான் நடக்குதோ இல்லையோ நம்முடைய பிளான் நல்லபடியா நடக்கணும் என்று சொல்கிறார். 


பிறகு யாருக்கும் தெரியாமல் கேக்கில் விஷ ஊசியை செலுத்துகிறார்கள், அடுத்து ரிசெப்ஷன் தொடங்க ஆதி  ஒருத்தரை புரிஞ்சிட்டு கல்யாணம் பண்ண கூடாது, பிடிச்சா கல்யாணம் பண்ணிக்கணும், அதன் பிறகு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிட்டு வாழனும் என்று சொல்கிறான். பாரதி ஆதி எனக்கு கிடைத்த கிப்ட் என்று அவனை பற்றி பேசுகிறாள்.


இதயம்: சீரியலை எங்கு பார்ப்பது?


இதயம் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ