IIFA Awards 2024: IIFA ராக்ஸ் 2024 நிகழ்வை ஒளிரச்செய்ய தொகுப்பாளர்களாக களமிறங்கும் சித்தாந்த் சதுர்வேதி மற்றும் அபிஷேக் பானர்ஜியின் அட்டகாசமான ஜோடி


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நட்சத்திரங்கள் மற்றும் ஆளுமைகளை ஒன்றிணைக்கும் நிகழ்வான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விருதுகள் அதன் 2024 ஐஐஎஃப்ஏ ராக்ஸ் ஹோஸ்ட்களை அறிமுகம் செய்கிறது - டைனமிக் பவர்ஹவுஸ் ஜோடி சித்தாந்த் சதுர்வேதி மற்றும் அபிஷேக் பானர்ஜி.


மிகவும் எதிர்பார்க்கப்படும் IIFA விழா, இந்த ஆண்டு, அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் நடைபெற உள்ளது. சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு அமைச்சரான மேதகு ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானின் மதிப்பிற்குரிய ஆதரவின் கீழ், IIFA செப்டம்பர் 27 முதல் 29 வரை இந்த நிகழ்ச்சியை நடத்தும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட IIFA விழாவானது, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை - அபுதாபி மற்றும் அபுதாபியில் உள்ள அதிவேக இடங்கள் மற்றும் அனுபவங்களின் முன்னணி படைப்பாளரான மிரல் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படுகிறது. சினிமாவின் சிறப்புமிக்க இந்த வரலாற்றுக் கொண்டாட்டத்தில் எங்களுடன் இணைந்திட வாருங்கள்!! செப்டம்பர் 27, வெள்ளியன்று, துடிப்பான தென்னிந்திய திரைப்படத் தொழில்துறைகளைக் கொண்டாடும் நிகழ்வான IIFA உற்சவத்துடன் இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.


செப்டம்பர் 28, சனிக்கிழமையன்று உலகப் புகழ்பெற்ற IIFA விருது வழங்கும் விழா நாடைபெறும். இது உற்சாகத்தின் உச்சகட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. IIFA விழா 2024 செப்டம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை IIFA ராக்ஸ் நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. IIFA ராக்ஸ் நிகழ்ச்சியை துடிப்பான மற்றும் திறமையான ஜோடியான சித்தாந்த் சதுர்வேதி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் ஸ்டைலாக தொகுத்து வழங்கவுள்ளனர்.


கல்லி பாய் படத்தில் எம்சி ஷேரின் கதாபாத்திரத்திற்காக IIFA விருதுகள் 2020 இல் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்ற சித்தாந்த் சதுர்வேதி, IIFA விருதுகளின் 24வது பதிப்பில் IIFA ராக்ஸை தொகுத்து வழங்குவது குறித்த தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர், “உலக அளவில் இந்திய சினிமாவின் மிகப்பெரிய கொண்டாட்டமான இன்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடமி விருதுகளில் IIFA ராக்ஸை தொகுத்து வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்வு என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் எம்சி ஷேருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றது எனது வாழ்க்கையில் ஒரு முக்கிய தருணம். இப்போது IIFA ராக்ஸ் தொகுப்பாளராக இங்கு மீண்டும் வருவதன் மூலம் ஒரு முழு வட்டத்தை நிறைவு செய்தது போல் உணர்கிறேன். IIFA மேடையில் அதிகபட்ச உற்சாகத்தையும் துடிதுடிப்பையும் கொண்டு வர நான் முழு முனைப்புடன் உள்ளேன். இந்த நம்பமுடியாத அனுபவத்தை மீண்டும் ஒருமுறை உலகளாவிய IIFA குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன்.” என்று கூறினார்.


இந்திய நடிகரும், காஸ்டிங் இயக்குனருமான அபிஷேக் பானர்ஜி, செப்டம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை IIFA ராக்ஸை தொகுத்து வழங்குவது குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தி, "எனது IIFA பயணம் அசாதாரணமானதாக இருந்துள்ளது. ஒரு நடிகராகவும், நடிப்பு இயக்குனராகவும், நட்சத்திரங்களின் இந்த கண்கவர் காட்சிப்பொருளின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. இந்திய சினிமாவின் இந்த பிரமாண்டமான கொண்டாட்டம், இந்திய சினிமாவின் கலைத்திறனை மட்டும் கௌரவிக்கவில்லை, அது IIFA குடும்பத்தையும் ஒன்றிணைக்கின்றது. இதை தொகுத்து வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். செப்டம்பர் 29 ஆம் தேதி ராக்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, ஐஐஎஃப்ஏ பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், இந்த செப்டம்பரில் அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் சந்திப்போம்!" என்று கூறியுள்ளார்.


IIFA விழாவிற்கான ஒரு அட்டகாசமான நிறைவு விழாவாக IIFA ராக்ஸ் இருக்கும். இது இசை, நட்சத்திரங்கள், கவர்ச்சி ஆகியவற்றின் அதிசய சங்கமமாக மிளிர உள்ளது. இந்த விழா தொழில்துறையின் மிகவும் பிரபலமான திறமைகளை ஒன்றிணைக்கிறது. ஐஐஎஃப்ஏ ராக்ஸ், இந்திய சினிமாவின் முன்னோடிகளை கௌரவிக்க, தொழில்நுட்ப விருதுகள் வென்றவர்களுக்கு பின்னால் உள்ள திறனையும் தேர்ச்சியையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த வகையில், அற்புதமான அபுதாபியில் உள்ள யாஸ் ஐலண்டில் IIFA களியாட்டத்தின் நேர்த்தியான நிறைவு விழாவாக IIFA ராக்ஸ் இருக்கும்.


இப்போதே உங்கள் IIFA விழா 2024 டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளுங்கள்!!


- UTSAVAM LIVE: https://www.etihadarena.ae/en/event-booking/iifa-utsavam 


- AWARDS LIVE: https://www.etihadarena.ae/en/event-booking/iifa-awards-2024 


- ROCKS LIVE: https://www.etihadarena.ae/en/event-booking/iifa-rocks-2024 


Platinum List 


https://abu-dhabi.platinumlist.net/event-tickets/91813/iifa-utsavam-2024-at-etihad-arena-abu-dhabi 


https://abu-dhabi.platinumlist.net/event-tickets/94211/iifa-awards-2024-at-etihad-arena-abu-dhabi 


https://abu-dhabi.platinumlist.net/event-tickets/94209/iifa-rocks-2024-at-etihad-arena-abu-dhabi 


 IIFA & IIFA உற்சவம் பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் அப்டேட்களுக்கு: 


- Website https://www.iifa.com/ | https://www.iifa.com/iifa-utsavam-2024  


- Instagram https://www.instagram.com/iifa/?hl=en | https://www.instagram.com/iifautsavam?igsh=MW9jeDN0Y3ZpMjR6dw==  


- Facebook https://www.facebook.com/IIFA/ | https://www.facebook.com/share/NtzrjV3Gxt6GU6eD/?mibextid=LQQJ4d  


- YouTube https://www.youtube.com/user/IIFA |  https://youtube.com/@IIFAUtsavam?si=4F8c1VXjZgIe6ld-  


ஊடக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்: iifafestivalpr@gmail.com    


அர்ச்சனா பிரதான் |+919987099265 | archana.pradhan@iifa.com


IIFA (இன்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடமி)


IIFA சினிமாத்துறை, வணிகங்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே ஒரு பாலமாக செயல்பட்டு  “ஒரே மக்கள். ஒரு உலகம்" என்ற அனைவரின் கனவையும் நிஜமாக்குகிறது. IIFA மிகவும் பாராட்டப்படும் தெற்காசிய திரைப்பட அகாடமியாகும். சர்வதேச பிரதேசங்களில் உள்ள பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களை இந்திய திரைப்படத்துறை சென்றடைய வாய்ப்பை வழங்கும் உலகளாவிய தளமாக இது உள்ளது. IIFA தளத்தின் மூலம் செய்யப்பட்ட கூட்டணிகள் இந்தியாவிற்கு பெரும் நன்மைகளையும் ஆதாயங்களையும் வழங்குகின்றன. விழாவை நடத்தும் நாட்டிற்கும் இதே போன்ற நன்மைகளை உருவாக்குவதும் இதன் ஒரு முக்கிய நோக்கமாக உள்ளது. சுற்றுலா, பொருளாதார மேம்பாடு, வர்த்தகம், கலாச்சாரம், எல்லை தாண்டிய முதலீடுகள் மற்றும் திரைப்பட இணைத் தயாரிப்புகளை ஊக்குவித்து, அதன் மூலம் இந்தியா மற்றும் நிகழ்வை நடத்தும் நாடுகளுக்கு பரஸ்பர நன்மைக்கான அமைப்பை நிறுவுவதே இதன் குறிக்கோளாகும். IIFA வீகெண்ட் & விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் புதிய, அற்புதமான மற்றும் அழகான இடங்களுக்குச் செல்கிறது. இந்த புதிய இடங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளின் மூலம், இந்தியத் திரைப்படத்துறை மற்றும் கலாச்சாரத்தின் சிறப்புகளை கொண்டாடி, இந்திய சினிமாவையும் இந்தியாவையும் பரந்த பார்வையாளர்களிடம் IIFA அழைத்துச் செல்கிறது.


https://www.iifa.com/


மேலும் படிக்க | IIFA Awards 2024: அபுதாபியில் 3 நாள் கொண்டாட்டம்... இணை-தொகுப்பாளராக இணையும் விக்கி கௌஷல்


மேலும் படிக்க | IIFA Awards 2024: அபுதாபியின் யாஸ் தீவில் 3 நாள் கொண்டாட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ