IIFA Awards 2024: லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ள விக்கி கௌஷல் ஷாருக்கான் மற்றும் கரண் ஜோஹருடன் இணைந்து IIFA விருதுகள் 2024 ஐ தொகுத்து வழங்குவார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விக்கி கௌஷலின் 'தௌபா தௌபா' அலை செப்டம்பர் 2024 இல் அபுதாபியில் உள்ள யாஸ் தீவை மூழ்கடிக்க தயாராக உள்ளது.


செப்டம்பர் 2024 -இல் ஐஐஎஃப்ஏ விருதுகளின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 24வது பதிப்பு அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் ரசிகர்களின் உள்ளம் கவர் நாயகனாக இருக்கும் விக்கி கௌஷல், ஷாருக்கான் மற்றும் கரண் ஜோஹருடன் இணைந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.


உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு உண்மையிலேயே அற்புதமான விருந்து ஒன்று காத்திருக்கிறது. IIFA Awards 2024 -இன் இணை-தொகுப்பாளராக, விக்கி கௌஷல், தனது வசீகரிக்கும் 'தௌபா தௌபா' நடன அசைவுகளின் மூலம் அனைவரையும் மறக்க முடியாத அனுபவத்தில் மூழ்கடிக்க வருகிறார். மகிழ்ச்சியில் திளைக்க தயாராகுங்கள்!!


IIFA ஃபெஸ்டிவலின் 24வது பதிப்பில் ஷாருக்கான் மற்றும் கரண் ஜோஹருடன் இணைந்து தொகுத்து வழங்குவது குறித்தும் இதில் கலந்துகொள்வது குறித்தும் தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்ட விக்கி கௌஷல், "IIFA எனது பயணத்தில் ஒரு முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. இது சினிமாவின் சிறப்பான கொண்டாட்டம். இந்திய சினிமாவின் திறமையான நபர்களும் தொலைநோக்கு பார்வையாளர்களும் கூடும் இடமாக இது உள்ளது. ஒவ்வொரு முறை நான் IIFA மேடையில் அடியெடுத்து வைக்கும் போதும் ஒரு மாயாஜாலத்தை உணர்கிறேன்.


பொழுதுபோக்கிற்கு எல்லையே இல்லாத அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் நடைபெறும் IIFA க்கு மீண்டும் வருவது நான் ஆவலுடன் எதிர்பார்த்த அனுபவம். இந்த முறையும் புதிய ஆற்றலுடன் மேடையை பற்றவைக்கவும், அற்புதமான IIFA குடும்பத்துடன் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கவும் முயற்சிக்கிறேன். சினிமாவின் எதிர்பார்ப்பும், ரசிகர்களும், கொண்டாட்டங்களும் அதை உண்மையிலேயே சிறப்பாக்குகின்றன. இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் வரலாற்றுப் புத்தகங்களில் முக்கிய பங்கு வகிக்கும்!" என்று கூறினார்.


IIFA கொண்டாட்டம்: தேதிகள் | செப்டம்பர் 27 - 29, 2024, யாஸ் தீவு, அபுதாபி


- செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை | IIFA உற்சவம்- துடிப்புமிக்க நான்கு தென்னிந்திய திரைத்துறைகளின் கொண்டாட்டம்


- செப்டம்பர் 28 சனிக்கிழமை | IIFA விருதுகள்


- செப்டம்பர் 29 ஞாயிறு | IIFA ராக்ஸ் | அழைப்பின் பேரில் மட்டுமே


செப்டம்பர் 27 முதல் 29 வரை நடைபெறும் IIFA விருதுகள் மற்றும் IIFA உற்சவத்தில் மிகப்பெரிய நட்சத்திரங்கள் ஒன்றிணைய உள்ளதால், இந்திய சினிமாவின் இணையற்ற கொண்டாட்டத்தை இதில் அனுபவிக்கலாம். இந்தி சினிமா மற்றும் துடிப்பான தென்னிந்திய திரைத்துறைகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகியவற்றையும் கௌரவிக்கும் ஒரு அற்புதமான நிகழ்வாக இது இருக்கும். அபுதாபியில் உள்ள யாஸ் தீவில், எத்திஹாட் அரங்கில் எங்களுடன் இந்த கொண்டாட்டத்தில் நீங்களும் இணைய விழைகிறோம். இந்திய சினிமாவின் ஒப்பற்ற நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் தருணம்: ஐந்து மிகச்சிறந்த சினிமா துறைகளின் நட்சத்திரப் பேரணி - இந்திய சினிமாவின் ஒரு வரலாற்றுக் கொண்டாட்டம்!


இப்போதே உங்கள் IIFA விழா 2024 டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளுங்கள்!!


- UTSAVAM LIVE: https://www.etihadarena.ae/en/event-booking/iifa-utsavam 


- AWARDS LIVE: https://www.etihadarena.ae/en/event-booking/iifa-awards-2024 


- ROCKS LIVE: https://www.etihadarena.ae/en/event-booking/iifa-rocks-2024 


Platinum List 


https://abu-dhabi.platinumlist.net/event-tickets/91813/iifa-utsavam-2024-at-etihad-arena-abu-dhabi 


https://abu-dhabi.platinumlist.net/event-tickets/94211/iifa-awards-2024-at-etihad-arena-abu-dhabi 


https://abu-dhabi.platinumlist.net/event-tickets/94209/iifa-rocks-2024-at-etihad-arena-abu-dhabi 


IIFA & IIFA உற்சவம் பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் அப்டேட்களுக்கு: 


- Website https://www.iifa.com/ | https://www.iifa.com/iifa-utsavam-2024  


- Instagram https://www.instagram.com/iifa/?hl=en | https://www.instagram.com/iifautsavam?igsh=MW9jeDN0Y3ZpMjR6dw==  


- Facebook https://www.facebook.com/IIFA/ | https://www.facebook.com/share/NtzrjV3Gxt6GU6eD/?mibextid=LQQJ4d  


- YouTube https://www.youtube.com/user/IIFA |  https://youtube.com/@IIFAUtsavam?si=4F8c1VXjZgIe6ld-  


ஊடக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்:


அர்ச்சனா பிரதான் |+919987099265 | archana.pradhan@iifa.com


மேலும் படிக்க | IIFA Awards 2024: அபுதாபியின் யாஸ் தீவில் 3 நாள் கொண்டாட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ