கொரோனா தொற்றுநோய்க்குஎதிராக போராடி வரும் மக்களுக்கு அர்ப்பணித்து ‘பாரத பூமி’ என்ற தலைப்பில் ஒரு பாடலுக்கு இசையமைத்து வெளியிட்டுள்ளார் இசைஞானி இளையராஜா. இசைஞானி எழுதிய இந்த பாடலின் தமிழ் பதிப்பிற்கு புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்துள்ளார். மறுபுறம், இந்த பாடலின் இந்தி பதிப்பை சாந்தனு முகர்ஜி பாடியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளையராஜாவின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த பாடல், கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், சாமானியர்கள் மற்றும் காவல்துறையினரின்அன்றாட அவலநிலையைக் காட்டுகிறது. மேலும், இந்த பாடலில் இளையராஜா தனது மேசையில் அமர்ந்து இசையமைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.



அவர்களின் சேவையைப் பலரும் போற்றி பாராட்டி வரும் நிலையில் இளையராஜா பாரத பூமி என்ற பாடலை எழுதி இசையமைத்து பாரத பூமி என்ற பாடலை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடலை தமிழில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். மேலும் இந்தியில் சாந்தனு முகர்ஜி பாரத பூமி பாடலைப் பாடியுள்ளார்.


 இந்தப் பாடல் இளையராஜாவின் யூடியூப் பக்கத்தில் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என வலியுறுத்தும் விதத்தில் இந்தப் பாடல் அமைந்துள்ளது.


(மொழியாக்கம்: தமிழ்ச் செல்வன்)