Ilaiyaraaja Daughter Bhavatharini Death Cause: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி, புற்றுநோய் காரணமாக நேற்று முன்தினம் (ஜனவரி 25) உயிரிழந்தார். இதனால் தமிழ் திரையுலகே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பவதாரணி உயிரிழப்பு:


இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி, தமிழ் திரையுலகில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு 47 வயதாகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், இலங்கையில் உள்ள கொலம்போ நகரில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்ட திரையுலகினரும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து சென்னைக்கு வரவழக்கைப்பட்டு, பின்பு அவரது சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டது. 


முன்கூட்டியே கணிப்பு? 


பவதாரணி, தான் உயிரிழக்கப்போகிறோம் என்பதை முன் கூட்டியோ கணித்தாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து இணையத்திலும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. பவதாரணி, சிகிச்சைக்காக இலங்கைக்கு செல்வதற்கு முன்னர், பிரேம் ஜி, யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, கார்த்திக் ராஜா, இளையராஜா உள்ளிட்டோரை சந்தித்து அவர்களுடன் பேசி நேரம் செலவிட்டதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | 30 படங்களில் பாடி 300 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த பிரபல பாடகி! பவதாரணியின் சொத்து மதிப்பு...


அத்துடன், அவர்களுக்கு பிடித்தவை அனைத்தையும் வாங்கி கொடுத்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், தனது நோயின் தீவிரத்தை அறிந்த பவதாரணி, தனது மரணதத்தை முன் கூட்டியே கணித்து குடும்பத்தினரை சந்தித்து இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது சினிமா வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்படாத தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. 


பவதாரணிக்கு இருந்த பிரச்சனை என்ன? 


பாடகி பவதாரணிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்கோளாறுகள் இருந்துள்ளது. இது குறித்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பிறகுதான் அவருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதே தெரிய வந்துள்ளது. 


பவதாரணி பாடிய பாடல்கள்:


சென்னையில் படித்து வளர்ந்த பவதாரணி, பிரபல பத்திரிக்கையாளரின் மகன் சபரி ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனது தந்தை இளையராஜா மற்றும் சகோதரர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக, மயில் போல பொண்ணு ஒன்னு, அக்கா நீ சிரிச்சா, இளைய நிலாவே, குட்டி குயிலாயில் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் நீங்கா இடம் பெற்றுள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையில் பூத்தது, சிரித்தாலே உள்பட பல பாடல்களை பாடியுள்ளார். 


மேலும் படிக்க | இளையராஜா மகள் பவதாரணியின் வாழ்க்கை வரலாறு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ