Tamil Cinem News: கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக படப்பிடிப்பு நடந்து வரும் “அயலான்” படம் எப்பொழுது திரைக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டுட்டிருக்கும் வேளையில், படத்தின் தயாரிப்பாளரான கேஜேஆர் ராஜேஷ், “அயலான்” படம் குறித்த முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். “அயலான்” படத்தை குறித்து அவர் கூறியது என்ன? என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் கூறியது:


சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, ஆர். ரவி குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், எங்களின் பிரம்மாண்ட படைப்பு 'அயலான்' பற்றிய புதிய அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.


மேலும் படிக்க: தீபாவளிக்கு வெளியாகும் அயலான் திரைப்படம்?


இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளை தாண்டி, நாளை ஏப்ரல் 24, 2023 காலை 11:04 மணிக்கு ‘அயலான்' அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.


"அயலான்" திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம். அயலான், ஒரு பான்-இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது. திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தபட்டு உள்ளது.



மேலும் படிக்க: சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட் சுடசுட இதோ


மேலும், 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில், பல ஹாலிவுட் திரைப்படங்களின் CG-க்குப் பின்னால் உள்ள Phantom FX நிறுவனத்திற்கு, அவர்களது அளப்பரிய CG பணிக்காக நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம்.


உங்களது பொறுமை மற்றும் இடைவிடாத ஆதரவிற்காக அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். நாளைய அயலான் அப்டேட் நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும்.


‘அயலான்’ மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட, அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்ல தயாராகுங்கள்!


மேலும் படிக்க: சிவகார்த்திகேயன் - ஞானவேல்ராஜா இடையே சமரசம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ