சென்னை: கடந்த 19 ஆம் தேதி சென்னை பூந்தமல்லி அருகே இந்தியன்-2 படப்பிடிப்பின் போது கிரேன் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் குறித்த விசாரணைக்கு, சென்னை மத்திய குற்றப்பிவு அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்று ஆஜரானார் இயக்குனர் ஷங்கர். அவரிடம் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்க்கொள்ளப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வாரம் புதன்கிழமையன்று சென்னையில் உள்ள ஈவிபி (EVP) ஸ்டுடியோவில் படப்பிடிப்பின் நடந்து கொண்டிருந்தது போது கிரேன்கள் விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மது (29), சந்திரன் (60), கிருஷ்ணா (34) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என நடிகர் கமல்ஹாசன்  அறிவித்துள்ளார். அதேபோல இந்த படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனமும் நிதியுதவி அறிவித்துள்ளது.


இந்த விபத்து குறித்து தந்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்த கமல்ஹாசன், "எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் எனக் கூறியிருந்தார்.