அக்னி எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் படமாக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்னி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முதல் திரைப்படமாக உருவாகும் "தி வெர்டிக்ட்" கோர்ட்ரூம் டிராமா, திரில்லராக உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் திரு. பிரகாஷ் மோகன்தாஸ் மற்றும் இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இருவரும் டெக்சாஸில் வசிப்பவர்கள். இந்த படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் ஆஸ்டின், டெக்சாஸில் படமாக்கப்பட்ட முதல் சர்வதேச இந்தியத் திரைப்படமாகும். மேலும் ஒரு சுவாரஸ்யமாக, இந்த படம் 23 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.


நடிகை சுஹாசினி மணிரத்னம், வரலக்ஷ்மி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோரோடு உள்ளூர் அமெரிக்கக் கலைஞர்களும் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


மேலும் படிக்க | கன்னியாகுமரி கோவில்களில் நடிகை நயன்தாரா இன்று சாமி தரிசனம்


புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி படப்புகழ் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இறுதிச்சுற்று, சூரரைப் போற்று மற்றும் விக்ரம் வேதா படப்புகழ் சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்துள்ளார். பிரபல இளம் பாடகர் ஆதித்யா ராவ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். என்.கோபிகிருஷ்ணன் திரைப்பட நடிகர்கள் தேர்வு மற்றும் மார்க்கெட்டிங்க் பணிகளைச் செய்துள்ளார் 


அனைவரும் ரசித்து மகிழும் சிறப்பான படைப்புகளை மாறுபட்ட களங்களில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அக்னி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் “தி வெர்டிக்ட்” திரைப்படம் இந்தியத் திரைத்துறையில் ஒரு ஆரம்பமாக இருக்கும். 



கோலிவுட்டின் வசீகர ஜோடியான திருமதி சினேகா & திரு. பிரசன்னா ஆகியோர் தற்போது சமூக ஊடகங்களில் டிரெண்டிங்கில் இருந்து வரும் “தி வெர்டிக்ட்” படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.


மேலும் படிக்க | KS ரவிக்குமார் மற்றும் விக்ரமன் என்வாழ்வில் முக்கியமான நபர்கள் - சரத்குமார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ