கடந்த 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 11 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. 2019 வருடம் ஐபிஎல் தொடரின் 12 வது சீசன் நடக்க உள்ளது. எப்பொழுதும் ஐபிஎல் தொடர் மே மாதம் நடைபெறுவது வழக்கம். ஆனால் அடுத்த வருடம் மே மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பதால், ஐபிஎல் 12 சீசன் வழக்கத்தைவிட முன்னதாகவே தொடங்கப்பட உள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) கோவாவில் நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தாங்கள் வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தது. இதனையடுத்து ஒவ்வொரு அணியும் விடுவிக்கும் வீரர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 வீரர்களை வைத்துள்ளது. அதில் மூன்று பேரை மட்டும் விடுவித்துள்ளது. மற்ற 22 பேரை தக்கவைத்துக் கொண்டது. தக்க வைக்கப்பட்ட வீரர்களில் ஹர்பஜன் சிங்கும் இடம் பெற்றுள்ளார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளதால், சென்னை ரசிகர்களுக்கு தமிழில் டுவிட் செய்துள்ளார். அவர் கூறியதாவது, 


"தமிழ் நெஞ்சங்களே நான் வந்தா ராஜாவாத்தான் வருவேன். 
திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் சென்னை சூப்பர் கிங்ஸ்.
சும்மா நெருப்பா, சிறப்பா ஒவ்வொரு மேட்சும் #தெறிக்கவிடலாமா!
வோர்ல்டு மொத்தமும்
அரளவுடனும் பிஸ்து.
பிசுறு கெளப்பி
பெர்ளவுடனும் பல்து.. 2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக என்னை தக்கவைத்துக்கொண்டத்தில் மகிழ்ச்சி"


இவ்வாறு பதிவிட்டுள்ளார்.