அதிர்ச்சியில் திரையுலகம்! இணையத்தில் ரிலீஸானதா விவேகம்?
![அதிர்ச்சியில் திரையுலகம்! இணையத்தில் ரிலீஸானதா விவேகம்? அதிர்ச்சியில் திரையுலகம்! இணையத்தில் ரிலீஸானதா விவேகம்?](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/08/24/118183-vivekam.jpg?itok=zQC7QL6p)
இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ திரைப்படம் இன்று உலக முழுவதும் பிரம்மாண்டமான முறையில் வெளியானது. இதில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
சுமார் மூன்று ஆண்டுகள் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் மொத்தம் 100 கோடி ரூபாய் செலவில் தயாராகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படம் வெளியாக சில மணி நேரத்துக்கு முன்னதாக சில இணையதளங்களில் இந்த திரைப்படம் முழுமையாக வெளியாகிவிட்டது. பலர் இந்தப் படத்தை டவுன்லோடு செய்து பார்த்தது வருகிறார்கள்.
மேலும் சிலர் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில், இப்படத்தின் காட்சிகளை நேரலையில் பதிவிட்டு வருகிறார்கள். இது திரையுலகினர் மத்தியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.