ஜெய்பீம் படத்தில் நாடோடி பழங்குடியினர் சமூகத்தினரை இழிவுபடுத்தியதாக கூறி படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல்  பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெய்பீம் பட வழக்கு:


கடந்த 2021ம் ஆண்டு வெளியான ஜெய்பீம் படத்தில், நாடோடி பழங்குடியினர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் நோக்கில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து ‘ஜெய்பீம்’ படத்தை தயாரித்து நடித்த சூர்யா, இயக்குனர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாடோடி பழங்குடியினர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிசில் புகார் அளித்தார். 


“பதிலளிக்க வேண்டும்..” நீதிமன்றத்தில் உத்தவரவு..! 


முருகேசன் கொடுத்திருந்த புகார் மீது  நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்தும்,  புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகேசன் மனுத் தாக்கல் செய்தார்.  


இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.ஹேமலதா,  சென்னை காவல் துறை, நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு,  விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
ஜெய்பீம் பட சர்ச்சை: 


மேலும் படிக்க | ‘தளபதி 68’ படத்தில் விஜய்க்கு 2 கதாநாயகிகள்…! யார் யார் தெரியுமா..?


1993ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஜெய் பீம். இந்த படத்தில், “சாதிய அடக்குமுறையை கையாளும் அதிகாரிகள், ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களை பொய் வழக்கு போட்டு துன்புறுத்துகின்றனர்..” என்ற வகையில் சில காட்சிகள் இடம் பெற்றிருக்கும். 


ஜெய் பீம் படம் வெளியான பிறகு, படத்தின் கதையே பெறும் சர்ச்சையாக வெடித்தது. குறிப்பாக, சில அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய அரசியல் பிரமுகர்களும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இருப்பினும் ரசிகர்களின் வரவேற்பு, இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமாக இருந்தது. 


வருத்தம் தெரிவித்த இயக்குநர்..


‘ஜெய் பீம்’ படம், குறிப்பிட்ட சாதியினரின் உணர்வுகளை துன்புறுத்தும் வகையில் உள்ளதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, அப்படத்தின் இயக்குநர் ஞானவேல் அதற்கு விளக்கம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருந்தார். ஜெய்பீம் திரைப்படம், குறிப்பிட்ட சமுதாயத்தையோ, தனிப்பட்ட நபரையோ அவமதிக்கும் எண்ணத்தில் எடுக்கப்படவில்லை என்று அவர் தனது விளக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அப்படி யாரேனும் இதனால் மனவருத்தம் அடைந்திருந்தால் அவர்களுக்கு தன் உளவுப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியிருந்தார். 


படக்குழு:


ஜெய்பீம் படத்தில், நடிகர் சூர்யா சந்துரு என்ற வழக்கறிஞரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். செங்கேணி எனும் கதாப்பாத்திரத்தில் ரெஜிமோல் ஜோசி என்ற மலையாள நடிகை நடித்திருந்தார். ராஜாகண்ணு கதாப்பாத்திரத்தில் பிரபல நடிகர் மணிகண்டன் நடித்திருந்தார். படம், நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் உண்மையான கதையை உண்மையாக கூறவில்லை என்பது போன்ற ஏக வசனங்களை சிலரிடமிருந்து பெற்றது. 


மேலும் படிக்க | “நாங்க சென்னை சிட்டி கேங்ஸ்ட..” சென்னையின் அருமை பெறுமையை பேசும் அழகான பாடல்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ