பத்திரிகையாளர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், சூர்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் ஜெய் பீம். இதுவரை பொது சமூகம் கண்டுகொள்ளாத இருளர் இன மக்களையும் அவர்களது சந்திக்கும் இன்னல்களையும் இப்படம் பதிவு செய்திருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படத்தில் நீதியரசர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து படத்தை தயாரிக்கவும் செய்தார். அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் படத்தை பார்த்த திரைத்துறையினர், ரசிகர்கள் என அனைவரும் படத்தை கொண்டாடினர்.


https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/surry_0.jpg


இந்நிலையில் ஜெய் பீம் படத்துக்கு தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. இயக்குநர் தாதா சாகேப் பால்கேவின் பிறந்தநாளான ஏப்ரல் 30ஆம் தேதி சர்வதேச திரைப்பட விழா நடந்தது.


இதில் சிறந்த படத்துக்கான விருதை ஜெய் பீம் பெற்றுள்ளது. மேலும் ராசாக்கண்ணு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த மணிகண்டன் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றிருக்கிறார்.


 



இதுதொடர்பான அறிவிப்பை 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.



அதேபோல்  ‘ஏ பியூட்டிஃபுல் ப்ரேக் அப்’ என்ற படத்திற்கு இசையமைத்ததற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.


மேலும் படிக்க | மகேஷ் பாபுவை அறைந்த கீர்த்தி சுரேஷ்... தெலுங்கு திரையுலகில் பரபரப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR