ரஜினிக்கு 150 கோடி! அப்போ தமன்னாவிற்கு எத்தனை கோடி? ஜெயிலர் படக்குழுவின் சம்பள விவரம்..!
Jailer Cast and Crew Salary Details: இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இதைத்தாெடர்ந்து ஜெயிலர் படக்குழுவின் முழு சம்பள விவரம் குறித்த தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
‘சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம், ஜெயிலர். இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விஜய் வசந்த், மோகன் லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷோகேஸ் டிரைலர் வீடியாே நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
ஜெயிலர் திரைப்படம்:
கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இந்த படத்திற்கு பிறகு இவர் டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை எடுத்தார். டார்க் காமெடி, கொலை, கடத்தல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து படங்களை இயக்குபவர் நெல்சன். இளம் இயக்குநர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்துள்ள ரஜினிகாந்த், நெல்சனுக்கும் அந்த வாய்ப்பினை அளித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய் வசந்த், விநாயகம், விடிவி கணேஷ், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். மலையாள நடிகர் மோகன் லால் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் இப்படத்தில் காமியோ கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். படம் வரும் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
ரஜினிகாந்த்:
தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட மூன்று தலைமுறை ரசிகர்களை ‘தலைவா..’ என்று அழைக்க வைத்தவர் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்தில் ஹீரோவாக நடிக்கும் இவருக்குத்தான் இருப்பதிலேயே அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு படத்திற்கு 100-120 கோடி வரை சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த், ஜெயிலர் படத்திற்காக 150 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது, ரஜினியின் 169ஆவது படம். இந்த சம்பளம், அடுத்தடுத்து இவர் நடிக்கவிருக்கும் படங்களில் இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | உலகளவில் ட்ரெண்டாகும் ஒரே தமிழ் படம்..! ஒடிடியில் ‘மாமன்னன்’ படைத்த புதிய சாதனை..!
மோகன்லால்:
மலையாள திரையுலகின் ஸ்டார் நடிகர்களுள் ஒருவர் மோகன்லால். ரசிகர்களால் செல்லமாக ‘லாலேட்டன்’ என அழைக்கப்படும் இவர், படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். இவருகக்கு ஜெயிலர் படத்தில் கேமியோ ரோல் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இவர் கதாப்பாத்திரம் தொடர்பான காட்சிகள் படத்தில் 10 நிமிடங்களுக்கும் குறைவாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. இவர் படத்தின் பட்ஜெட்டை பொருத்து தன் சம்பளத்தை நிர்ணயிப்பதாக கூறப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடிப்பதற்காக இவர், 8 கோடி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக மலையாளத்தில் நடிக்க அவர் ஒரு படத்திற்கு 4-18 கோடி வரை வாங்குவாராம்.
ஜாக்கி ஷ்ராஃப்:
பாலிவுட்டின் பிரபல நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், ஜெயிலர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர், இதற்கு முன்னர் விஜய்யின் பிகில் படத்தில் நடித்திருந்தார். பொதுவாக ஒரு படத்தில் நடிக்க இவர் வாங்கும் சம்பளம், 17-20 கோடி வரை வாங்குவாராம். ஜெயிலர் படத்திற்காக அவர் 4 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சிவராஜ்குமார்:
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர், சிவராஜ் குமார். இவரும் ரஜினியும் நல்ல பந்தம் உண்டு. சமீபத்தில் நடைப்பெற்ற ஜெயிலர் பட விழாவில் ரஜினி தனக்கு சித்தப்பா போன்றவர் என சிவராஜ் குமார் குறிப்பிட்டிருந்தார். இவருக்கு ரஜினியுடன் நடிக்க ஜெயிலர் படம் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக அவர் 2-4 கோடி சம்பளமாக வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்திற்கு 3-4 கோடி சம்பளமாக வாங்குவாராம்.
தமன்னா:
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று திரையுலகிலும் ரசிகர்களை சேர்த்து வைத்திருப்பவர் தமன்னா. ஆரம்பத்தில் தென்னிந்திய மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர், தற்போது இந்தி படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார். இவர் ஒரு படத்திற்கு 3-5 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். ஜெயிலர் படத்தில் நடிப்பதற்காக இவர் 3 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
ரம்யா கிருஷ்ணன்:
திரையுலகில் பல ஆண்டுகளாக இருந்தாலும் பாகுபலி படத்தில் ‘ராஜமாதா’வாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து ‘வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு போகல..’ என டைலாக் பேசிய இவர், அதன் பிறகு இப்போதுதான் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். அதுவும், இப்படத்தில் ரஜினியின் மனைவியாக இவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக ரம்யா கிருஷ்னனுக்கு 80 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்கிளில் பேசிக்கொள்கின்றனர்.
மேலும் படிக்க | “பீஸ்ட் பாதி..பாட்ஷா மீதி..” ஜெயிலர் பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ