அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தின் ப்ரிவ்யூ காட்சிகள் வெளியாகி இணைத்தில் தீயாய் பரவி வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷாருக்கான் மற்றும் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம், ஜவான். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரிவ்யூ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


ஜவான் படத்தின் காட்சிகள்..


ஜவான் படத்தின் ஒரு சில காட்சிகள் உருவாகியிருக்கும் விதத்தை படம் பிடித்து மேக்கிங் வீடியாே-ப்ரிவ்யூ காட்சியாக படக்குழு வெளியிட்டுள்ளது. 



இந்த வீடியோவை நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகியாேர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இது, ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க | பிரபல திரைப்பட தயாரிப்பாளர் உயிரிழப்பு..! முதல்வர் உள்பட பலர் இரங்கல்…!


ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பு..


ஜவான் படத்தை பார்க்க, தமிழ் திரையுலக ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து திரையுலக ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்காெண்டுள்ளனர். காரணம், அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ளதுதான். 5 வருடங்கள் ஷாருக்கானின் படம் எதுவும் வெளிவராததை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் ‘பதான்’ படம் வெளியானது. இதையடுத்து வெளிவர இருக்கும் படம், ஜவான். ஷாருக்கு இதுவரை எடுக்காத அவதாரத்தை இந்த படத்தில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி 2019ஆம் ஆண்டு ‘பிகில்’ படத்தை இயக்கிய அட்லீ அதன் பிறகு இந்த படத்தைதான் இயக்கி வருகிறார். அதனால், இப்படத்தின் மீது பலருக்க மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 


விஜய் இருக்கிறாரா..?


ஜவான் படத்தில், நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக பேசப்பட்டது. ஆனால், இன்று வெளியாகியுள்ள முன்னோட்ட காட்சியில் நடிகர் விஜய் இல்லை. இருப்பினும், ஒருவர் முகத்தை மூடிக்கொண்டு சண்டையிடுவது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. இது, விஜய்தானா என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. விஜய்யை போலவே, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இதில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக பேசப்பட்டது. சொன்னது போலவே அவர் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அந்த காட்சியும் இன்று வெளியாகியுள்ள வீடியோவில் இடம் பெற்றுள்ளது. 


புதுவிதமாக ட்ரைலர் ரிலீஸ்..!


ஜவான் படத்தின் ட்ரைலர், இதுவரை எந்த படத்திலும் வெளிவராத அளவிற்கு ரிலீஸாகவுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் ஹீரோவாக நடித்துள்ள மிஷின் இம்பாசிபில் 7 (MIssion Impossible 7) படம், வரும் 12ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த படத்துடன் சேர்த்து ஜவான பட ட்ரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால், மிஷின் இம்பாசிபில் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். 


பட ரிலீஸ் எப்போது..?


ஜவான் திரைப்படத்தின் பணிகள், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக நடைப்பெற்று வருகின்றன. இந்த படம் எப்போதோ ரிலீஸாக இருந்ததாகவும், அட்லீ படத்தை முடிக்க சில நாட்கள் தாமதம் செய்ததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த வருட தொடக்கத்திலேயே ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், கடைசியில் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. 


படக்குழு:


ஜவான் படத்தில் லீட் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஷாருக்கான், நயன்தாராவைத்தவிர வேறு யார் யார் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தன. அவை, இன்று வெளியாகியுள்ள வீடியோ மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. விஜய் சேதுபதி மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் காமியோ கதாப்பாத்திரத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சானியா மல்கோத்ரா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஷாருக்கான், இந்த படத்திற்காக மொட்டை கெட்-அப்பில் வருகிறார். 


மேலும் படிக்க | பிரபல சின்னத்திரை நடிகர்கள் வீட்டில் அரங்கேறிய சோகம்..! போலீசார் விசாரணை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ