வெறும் 10 செகண்டு விளம்பரம்.. நடிகர் ஜெயம் ரவிக்கு இத்தனை கோடி சம்பளமா?
பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் ஜெயம் ரவியின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன் என பலர் நடித்திருந்தனர். இந்த பிரம்மாண்ட படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார் ஜெயம் ரவி. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
தற்போது பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்னர் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகராக ஜெயம் ரவி வலம் வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் வெளியாக தயாராகி வருகிறது. மேலும் இறைவன், சைரன் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
மேலும் படிக்க | 2வது திருமணம் செய்து கொள்கிறேனா? மீனா கொடுத்த விளக்கம்
இந்நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி குறித்து ஒரு சுவாரஸ்மான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் ஜெயம் ரவி தனது சம்பளத்தை உயர்ந்துள்ளாராம். அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு விளம்பரத்தில் நடிக்க கமிட்டான ஜெயம் ரவி, இந்த விளம்பரத்திற்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொன்னியின் செல்வன் வெற்றிதான் இந்த சம்பள உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் திரைப்படத்தை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று, ரூ.30 கோடிக்கு வாங்கி உள்ளது. மேலும் இந்த திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீட்டை தவிர்த்துள்ளது. இதனால், இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிகக் | பாலாவுக்கு பலத்த அடி?... வணங்கானிலிருந்து வெளியேறினார் சூர்யா... என்னதான் நடந்தது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ