ஆஹா தமிழ் ஓடிடி மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரித்துள்ள புதிய படத்திற்கு 'ரத்தசாட்சி' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழின் முன்னணி எழுத்தாளரும், சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்', 'வெந்து தணிந்தது காடு' உள்ளிட்ட வெற்றிப்படங்களின் வசனகர்த்தாவுமான ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ எனும் சிறுகதையை தழுவி ரத்த சாட்சி திரைப்படம் உருவாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயமோகனின் இந்தக் கதையை திரைப்படமாக உருவாக்குவதில் பிரபலமான பல தமிழ் இயக்குநர்கள் ஆர்வம் காட்டினர் என்று ஜெயமோகன் கூறியுள்ளார். இதுகுறித்து ஜெயமோகன், "'ரத்தசாட்சி' திரைப்படம் உருவானக் கதை மற்றொரு திரைப்படத்தின் பொருளாக இருக்கத் தகுதியானது. ரஃபிக் இஸ்மாயில் என்னும் இயக்குனர் என்னை அணுகி 'கைதிகள்' கதையை திரைப்படமாக்க விரும்பினார். 


இந்த சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் பிரபல இயக்குநர் மணிரத்னம் இக்கதையை திரைக்கு மாற்ற நினைத்தார். கதையின் உரிமையைப் பெற மற்றொரு பிரபல இயக்குநர் வெற்றிமாறனும் என்னை அணுகினார். ஆனால், கதை ஏற்கனவே ரஃபிக்கிடம்  கொடுக்கப்பட்டதாக அவர்களிடம் தெரிவித்தேன்" என்றார்.



மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் மாவீரன் படப்பிடிப்பு நிறுத்தமா? என்ன நடந்தது?


இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் என்பவர் இயக்கியுள்ளார். ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துவுள்ளார். ஆயுதப் படைகளுக்குள் மனிதாபிமானம் இருக்கிறதா? ஒருவரின் வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது? என்பதற்கு இப்படம் சான்றாகும்.


படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் நடித்துள்ளனர். அனிதா மகேந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை 'ஆஹா தமிழ்' ஓடிடி தளம் விரைவில் வெளியிட உள்ளது.
 
ஜிவி 2, குருதி ஆட்டம், மாமனிதன், கூகுள் குட்டப்பா, மன்மத லீலை, ரைட்டர் போன்ற பல்வேறு சிறந்த திரைப்படங்கள் ஆஹா ஓடிடியில் முன்னர் வெளியாகியிருந்தது. பல்வேறு வகைகளான  வெப் தொடர்களின்  மூலம் தமிழ் மக்களின் வரவேற்பையும் ஆஹா தமிழ் ஓடிடி பெற்றுள்ளது. பேட்டைக்காளி, அம்முச்சி 2, ஈமோஜி, அன்யாஸ் டுடோரியல், ஆகாஷ் வாணி, இரை போன்ற அனைத்து தொடர்களையும் ஒரு நாளைக்கு வெறும் 1 ரூபாயில் காணலாம் என தெரிவிக்கப்பட்டது. 


எழுத்தாளர் ஜெயமோகனின் பல்வேறு திரைப்படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி உள்ளார். அவரது படைப்புகள் படமாக எடுக்கப்பட்டுள்ளது. 'நான் கடவுள்', 'அங்காடித் தெரு', 'கடல்', 'காவியத் தலைவன்', 'பாபநாசம்', 'சர்கார்', 'எந்திரன் 2.0' உள்ளிட்ட திரைப்படங்களின் அவரின் பங்கு இருந்துள்ளது. மேலும், வெற்றிமாறன் எடுத்துவரும் 'விடுதலை' திரைப்படமும் இவரின் சிறுகதையை தழுவி எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | இந்த போட்டியாளருக்கும் மைனாவுக்கும் இப்படி ஒரு உறவா? லீக்கான தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ