பாபநாசம் திரைப்படத்தை அடுத்து தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் கார்த்திக், ஜோதிகா இணைந்து நடிக்கவுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலையாளத்தில் கடந்த 2013 ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் திரிஷியம். இத்திரைப்படத்தினை படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் பாபாநாசம் என்னும் பெயரில் எடுத்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். நடிகர் கமல் ஹாசன் கௌதமி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்.


தற்போது பாபாநாசம் இயக்குநர் ஜீத்து ஜோசப் மீண்டும் தமிழ் திரைக்கு திரும்பியுள்ளார். இந்த புதிய திரைப்படத்தில் கார்த்திக், ஜோதிகா இணைந்து நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



படத்தில் கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். கார்த்தியின் அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். கார்த்தியும் ஜோதிகாவும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை.


இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. வயாகாம் 18 நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.


ஜோதிகாவுடன் நடிப்பது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் கார்த்தி, “அண்ணியுடன் முதல் படத்தில் இணைந்து நடிக்க இருப்பது த்ரில்லாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பதிவில், மிகச்சிறப்பான தருணம். கார்த்தியையும் ஜோதிகாவையும் திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.