2016-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதிற்கு இயக்குநர் மற்றும் நடிகரான கே. விஸ்வநாத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய சினிமவின் தந்தை என்றழைக்கப்படும் மறைந்த இயக்குநர் தாதாசாகேப் பால்கே பெயரால் ஆண்டு தோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.


2016 ஆண்டுக்கான 'தாதாசாகேப் பால்கே' விருது மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான கே.விஸ்வநாத்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


வரும் மே மாதம் 3-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருதை ஜனாதிபதி வழங்க இருக்கிறார். இந்த விருதுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.


சலங்கை ஒலி, சுபசங்கல்பம், சங்கராபரணம் மற்றும் சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே. விஸ்வநாத்.  காசிநாதுனி விஸ்வநாத் என்ற இயற்பெயரை கொண்ட அவர் கடந்த 1992ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.


தேசிய திரைப்பட விருதுகள், நந்தி விருதுகள், பாலிவுட் பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.  அதனுடன் உத்தம வில்லன், யாரடி நீ மோகினி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.


இந்திய திரையுலகின் உயரிய விருதை வென்றுள்ள கே.விஸ்வநாத் ஏற்கனவே பல விருதுகளை குவித்தவர். சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் ஆகிய படங்களை இயக்கியவர். தனுஷ் நடிப்பில் வெளியான 'யாரடி நீ மோகினி' மற்றும் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘ராஜபாட்டை’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் கே.விஸ்வநாத் நடித்துள்ளார்.