விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காத்துவாக்குல ரெண்டு காதல் (Kaathu Vaakula Rendu Kaadhal) படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இதற்கிடையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் முதல் பாடல், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் இரண்டாவது பாடல் டூ.. டூ.. டூ கடந்த செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.



ALSO READ | Kaathu Vaakula Rendu Kaadhal: வெளியானது மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்


மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின் அப்டேட் பல நாட்களுக்கு பின் நேற்றைய தினம் வெளியானது. அதில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படும் என தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார் விக்னேஷ் சிவன். அதன்படி இன்று காலை விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் ஒன்றை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டது.



இந்நிலையில் தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் சமந்தா நகம் கடிப்பது போல் உள்ளது மேலும் இவரது பெயர் கதிஜா என்பதையும் படக்குழு தெரிவித்துள்ளது. 


 



 


இந்த போஸ்டரில் சமந்தா நகம் கடிப்பது போல் உள்ளது மேலும் இவரது பெயர் கதிஜா என்பதையும் படக்குழு தெரிவித்துள்ளது. முன்னதாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் 'Rambo'  ராம்போ என்ற பெயர் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இதற்கு R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran என விரிவாக்கமும் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி படத்தை இயக்கிய இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விக்னேஷ் சிவன் அதைத்தொடர்ந்து இயக்கிய நானும் ரவுடி தான் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்திருந்தனர். ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த படத்தை பல மடங்கு வசூலையும் அள்ளியது.


தற்போது மீண்டும் நானும் ரவுடி தான் கூட்டணி இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | விரைவில் முக்கிய அறிவிப்பு, நயன்தாரா - விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR