‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ -லிரிக் வீடியோ!!
‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ படத்தின் காட்டு வாசி பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரசாக் இயக்கத்தில் ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. இந்த படத்தில் கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஸ்வாதி, அஸ்மிதா, ஆர்.வி.உதயகுமார், மன்சூர்அலிகான், அனுமோகன், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன், ரத்திஷ், விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.
யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் 4 முதியவர்களுகளின் நிலைமையை மையப்படுத்தி முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் இந்த படம் உருவாகி வருகிறது.
தற்போது இந்த படத்தின் காட்டு வாசி பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை கானா பாலா மற்றும் மன்சூர்அலிகான் பாடியுள்ளனர்.
லிரிக் வீடியோ:-