கபாலி வெற்றி விழா பிரமாண்ட ஏற்பாடு
ரஜினியின் கபாலி படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மிகப் பிரமாண்டமான விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்து வருகிறார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
பா. ரஞ்சித் இயக்கத்தில் தாணு தயாரித்த கபாலி படம், ரஜினியின் சினிமா வரலாற்றில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நான்காவாது வாரமும் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் தொடர்கிறது. இன்றைக்கு ஒரு படம் ரூ 500 கோடிகளுக்கு மேல் வசூலித்து இந்திய சினிமாவை பிரமிக்க வைத்துள்ளது.
கபாலி வெளியீட்டுக்கு முன்பு, சோளிங்கர் ரசிகர்கள் மாநாட்டில் கலைப்புலி தாணு பேசுகையில், 'கபாலி பெரிய வெற்றிப் பெறும். அந்தப் படத்துக்காக நான் மிகப் பெரிய விழா எடுக்கப் போகிறேன். ஒரு மாநாடு மாதிரி. ரசிகர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் விழாவை நடத்தப் போகிறேன்," என்று கூறியிருந்தார்.
அவர் கூறியது போலவே கபாலியின் 25-ம் நாளன்று இந்த விழாவை கலைப்புலி தாணு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். அரசின் அனுமதி கிடைத்ததும் இதைக்குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் தாணு என தெரிகிறது.