‘காடுவெட்டி’ ஜாதி படம் கிடையாது! நடிகர் ஆர்கே சுரேஷ் பேச்சு!
இது சாதி படம் இல்லை. நான் எந்த சாதியையும் தவறாக பேச மாட்டேன். சாதி என்பது உணர்வு மட்டுமே என்று காடுவெட்டி பட விழாவில் ஆர்கே சுரேஷ் பேசி உள்ளார்.
காடுவெட்டியார், காடுவெட்டி குரு, காடுவெட்டி என்றால் தமிழ் நாட்டு மக்களிடம் அத்தனை பிரபலம். அந்த தலைப்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’. மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர், இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மா.புகழேந்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
மேலும் படிக்க | ‘தலைநகரம்’ பட நாயகியை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்கார்னு பாருங்க..
விழாவில் இயக்குனர் பேரரசு பேசியதாவது:- “தல, தளபதி படங்களுக்கு இணையாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கிறது. நடிகர் பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் ‘மலையூர் மம்பட்டியான்’ படம்தான் அவரை பெரிய ஹீரோவாக்கியது. ‘சீவலப்பேரி பாண்டி’ படத்துக்கு பிறகு நெப்போலியன் பெரிய ஹீரோவாக வளர்ந்தார். அதேபோல் ‘காடுவெட்டி’ படத்துக்கு பிறகு ஆர்.கே.சுரேஷ் பெரிய ஹீரோவாக உயர்வது நிச்சயம். பலருடைய கெட்ட எண்ணங்களை இந்த காடுவெட்டி வெட்டிவிடும். சமுதாய கதைகளில் பெரிய ஹீரோக்கள் நடிப்பதில்லை. இந்த மாதிரி கதைக்கு ஆர்.கே.சுரேஷ் மாதிரியான ஹீரோதான் வேண்டும்” என்றார்.
இயக்குனர் மோகன் ஜி பேசியதாவது, “இந்தப்படம் பல பிரச்சனைகளை சந்தித்து வெளிவர உள்ளது. ‘திரெளபதி’ படத்தின் ரிலீசுக்காக நான் பட்ட கஷ்டம் அதிகம். அதேபோல் காடுவெட்டியும் பல பிரச்சனைகளையும் வழக்குகளையும் சந்தித்துள்ளது. பிரச்சனைகளை சந்தித்து ரிலீஸ் ஆகும் படங்கள் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. அந்தவகையில் ‘காடுவெட்டி’ மிகப்பெரிய ஹிட் ஆகும். குறிப்பாக இளைஞர்கள் கொண்டாடுவார்கள். தமிழ் நாட்டில் தவறான காதலை எதிர்த்தவர் காடுவெட்டி குருதான். சாதிக்கின் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. கனல் கண்ணன் மாஸ்டர் ஆக்ஷன் ப்ரியர்களுக்கு பெரிய ட்ரீட்டையே வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அடுத்த வீரமான ஹீரோ ஆர்.கே.சுரேஷ்தான். இந்தப்படத்தில் பெரிய சம்பவம் இருக்கு. ‘திரெளபதி 2’ விரைவில் தொடங்கும். அதற்குமுன் ‘காடுவெடி’யை கொண்டாடி முடியுங்கள்” என்றார்.
படத்தின் நாயகன் ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது, “என்னைப்பற்றிய எத்தனையோ கட்டுக்கதைகள் கற்பனைகளை கிளப்பிவிட்டார்கள். நான் 100 படங்கள் விநியோகம் செய்திருக்கிறேன். எத்தனையோ படங்கள் தயாரித்திருக்கிறேன்; 40 படங்கள் நடித்திருக்கிறேன். சினிமாவில் எனக்கு 15 வருட உழைப்பு உண்டு. எல்லா அரசியல்வாதிகள் எல்லா சாதிக்காரர்களுடனும் பழக்கம் உண்டு. அப்படியான சூழலில் என்னைப்பற்றி தவறான செய்திகள் வெளிவந்தது. 15 வருடமாக சினிமாவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நான் தவறு செய்திருப்பேனா?
வடமாவட்டங்கள் தென் மாவட்டங்களில் ரசிகர்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். அதனால் சினிமா, அரசியலை விட்டு நான் போகமாட்டேன். இப்போது காடுவெட்டிக்கு வருவோம். இந்த கேரக்டரில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். இயக்குனர் சோலை ஆறுமுகம் கதையை சொன்னதுமே அவரை மைண்ட்ல வச்சுதான் நடித்தேன். குரு ஐயாவின் குடும்பத்துக்கு சொல்றேன். இந்தப்படம் உங்களுக்கு பெருமை சேர்க்கும். இது உணர்வு சார்ந்த படம். இதை தமிழ்நாடு முழுவதும் வரவேற்பார்கள். இது சாதி படம் இல்லை. நான் எந்த சாதியையும் தவறாக பேச மாட்டேன். சாதி என்பது உணர்வு மட்டுமே” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ