Web Series: வெங்கட் பிரபுவும் காஜல் அகர்வாலும் இணைந்து கலக்கும் Live Telecast
சினிமாவில் கலக்கும் நடிகைகள் சின்னத்திரையில் வலம் வரும் காலம் மலையேறி, தற்போது வெப் சீரீஸ்களில் நடிக்கும் காலம் இது. இந்தப் பட்டியலில் நடிகை காஜல் அகர்வாலும் இணைந்துவிட்டார்.ஆனால், காஜல் நடிக்கவில்லை, அனைவரையும் பயமுறுத்துகிறார், மிரட்டுகிறார்.
புதுடெல்லி: சினிமாவில் கலக்கும் நடிகைகள் சின்னத்திரையில் வலம் வரும் காலம் மலையேறி, தற்போது வெப் சீரீஸ்களில் நடிக்கும் காலம் இது. இந்தப் பட்டியலில் நடிகை காஜல் அகர்வாலும் இணைந்துவிட்டார்.ஆனால், காஜல் நடிக்கவில்லை, அனைவரையும் பயமுறுத்துகிறார், மிரட்டுகிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ள ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற இணையத் தொடர் அண்மையில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.
காஜலுக்கு ரசிகர்களின் பாராட்டு மழை குவிகிறது. டிவிட்டரில் #LiveTelecast மற்றும் #KajalAggarwal என்ற ஹேஷ்டேக்குகள் பிரபலமாகின்றன.
இந்த இணையத் தொடரில் நடித்தபோது பல திகில் அனுபவங்கள் ஏற்பட்டதாகவும் கொளுத்திப் போடுகிறார் காஜல் அகர்வால். ஆள் அரவமற்ற வீட்டில்தான் தொடரின் காட்சிகள் படமாக்கப்பட்டன.
Also Read | தேர்தல் பிரச்சாரத்தில் Captain Vijayakanth: சிலிர்த்து போன சின்ன கௌண்டர் ரசிகர்கள்
“திகில் கதைக்கேற்ற இடத்தை படபிடிப்புக்காகத் தேர்ந்தெடுத்தார் வெங்கட் பிரபு. மலையுச்சியில் அந்த வீடு அமைந்திருந்தது. “அந்த வீட்டுக்குள் நுழைந்தாலே அச்சமாக இருக்கும். படபிடிப்பு முடிந்த பிறகும் அந்த வீடு பற்றி நினைத்தாலே அச்சமாக இருக்கும். என்னால் இன்னும் நிம்மதியாக தூங்க முடியவில்லை” என்று சொல்லி தொடரைப் பார்க்கும் ஆவலை தூண்டுகிறார் காஜல் அகர்வால்.
2008ஆம் ஆண்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘சரோஜா’ என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த காஜல் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் பிரபலமாக இருக்கும்போது, வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR