விஜய் 61 மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும்- தாணு வாழ்த்து
விஜய் 61 படம் தெறியை விட பெரிய ஹிட்டாக வேண்டும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு படகுழுவினருக்கு வாழ்த்தியுள்ளார்.
சென்னை: விஜய் 61 படம் தெறியை விட பெரிய ஹிட்டாக வேண்டும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு படகுழுவினருக்கு வாழ்த்தியுள்ளார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 61 படம் இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ருத் பிரபு என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, சத்யன் என பெரிய நட்சத்திரப் கூட்டமே பங்கேற்கிறது.
இந்த படம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படம் ஆகும். மேலும் இப்படத்திற்கு ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது:-
இயக்குனர் அட்லீயை இன்று சந்தித்தேன். தெறியை விட பெரிய ஹிட் கொடுக்க அட்லீ, விஜய் தம்பி, தேனாண்டாள் பிலிம்ஸுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.