Kamal Haasan Indian Box Office Collections : கடந்த 1996 ஆம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து சூப்பர்... டூப்பர்... ஹிட்டான திரைப்படம் இந்தியன். தற்போது 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் வசூல் நிலவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

28 ஆண்டுக்கு முன்பு வெளியான இந்தியன்:
28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தியன் படத்தில் கமல் (Kamal Haasan) இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். தற்போது இந்த படத்தின் அடுத்த பாகம் வருகிற 12 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் கமலுடன் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதில், கமல்ஹாசன் தந்தை சேனாபதியாகவும் மகன் சந்துரு கதாப்பாத்திரமாகவும் நடித்திருந்தார். முதல் பாகத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக தன் மகனை தானே கொள்வது போன்ற காட்சியும் இடம் பெற்றிருக்கும். 



மேலும் படிக்க | Latest News Madha Gaja Raja Release : 11 வருடங்கள் கழித்து ரிலீஸாகும் ‘மத கஜ ராஜா’ திரைப்படம்! எப்போது தெரியுமா?


இந்தியன் 2 அப்டேட்:
இந்நிலையில் இந்தியன் படத்தின் தொடர்ச்சி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திலும் கமல்ஹாசன் (Kamal Haasan) சேனாபதி தாத்தா பாத்திரத்திலேயே நடிக்கிறார். இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, மனோபாலா, நெடுமுடி வேணு என பலர் நடித்துள்ளனர், இவர்களுக்கு இந்த படத்தில் சித்தார்த் (Siddharth), பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preet Singh), காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, ஜெகன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர். தற்போது இந்தியன் 2 (Indian 2 Movie Update) படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து நாளை மறுநாள் திரையரங்கில் பிரம்மாண்டமாக ரிலீஸுக்கு தயாராக உள்ளது. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. படத்தில் இடம்பெற்று இருந்த அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது. அதனுடன் படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக படக்குழுவினர் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து உள்ளது. மேலும் இந்தியன் 2 படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.



விதவிதமான கெட்டப்பில் கமல்:
இத்னிடையே முதல் பாகத்தில் இரட்டை வேடங்களில் நடித்த கமல்ஹாசன், தற்போது இரண்டாம் பாகத்தில் 7 கெட்டப்களிலும், மூன்றாம் பாகத்தில் 5 கெட்டப்பிலும் தோற்றம் அளிக்கவுள்ளார். இதன் மூலம் தசாவதாரம் படத்தில் பத்து கெட்டப்களில் நடித்த சாதனையை முறியடிக்க உள்ளார்.



1996 இந்தியன் வசூல் நிலவரம்:
இதனிடையே தற்போது 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தியன் படத்தின் வசூல் நிலவரம் வைரலாகி வருகிறது. அதன்படி படத்தின் பட்ஜெட் 15 கோடிகள். இப்படம் சூப்பர் ஹிட்டானது மற்றும் அப்பவே 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனால் நாளை மறுநாள் வெளியாகப் போகும் இந்தியன் 2 படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியன் டிஸ்னி ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) தளத்தில் பார்க்கலாம்.


மேலும் படிக்க | Indian 2 Kamal Haasan Cameo Role : இந்தியன் 2 படத்தில் கமலுக்கு கேமியோ ரோலா? ஷங்கர் பதில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ