தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக கருணாநிதி, விஜயகாந்த், முத்தரசன் ஆகிய மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார், தனது பாலிய நண்பரான ரஜினியிடமும் வாழ்த்து பெற்றிருந்தார். மேலும் இன்று காலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார் பேட்டையில் கமல்ஹாசன் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 


மதுரையில் நாளை நடக்க இருக்கும் பொதுக் கூட்டத்தில் ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல் அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்போது நாளை நடைபெற உள்ள  பொதுக் கூட்டம் குறித்து நடிகர் கமல்ஹாசன் டிவீட் பதிவு செய்துள்ளார்.