ஜனவரி 26 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல் அறிவிப்பு!
சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றிருந்தார். அப்போது தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 26 முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன் என அறிவித்து இருந்தார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றிருந்தார். அப்போது தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 26 முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன் என அறிவித்து இருந்தார்.
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடுவதில் உறுதியாக இருக்கிறார். இதுதொடர்பாக அவர் கேரள முதல் மந்திரி பிரணாயி விஜயன், டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
மேலும் அவரது பிறந்தநாளில் பொதுமக்கள் கருத்தை அறிவதற்காக ‘செல்போன் செயலி’ ஒன்றை தொடங்கினார்.
இந்நிலையில், ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் பேசியா அவர், ஜனவரி 26 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். சுற்றுப்பயணங்கள் குறித்த அனைத்து விவரங்களும் ஜனவரி 18 அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.