65 வயதில் தான் கமலுக்கு ஞானம் வந்ததா? முதல்வர் தாக்கு
நடிகர் கமல்ஹாசனுக்கு 65 வயதுக்கு பிறகுதான் ஞானோதயம் வந்துள்ளது என்று சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
விஸ்வரூபம் படம் வெளிவருவதற்கு உதவியவர் ஜெயலலிதா. நன்றி மறந்து பேசுகிறார் கமல். கிராமங்களுக்கு சென்று மக்களை என்றாவது சந்தித்திருக்கிறாரா கமல்.
65 வயதுக்கு பிறகுதான் அவருக்கு ஞானோதயம் வந்துள்ளது எனக் கூறினார். மேலும் ஆட்சி தொடரக்கூடாது என்கிறார் கமல் என்றும் முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
அம்மாவிற்கு கலங்கத்தை ஏற்படுத்தும் விதமாக பேசுகிறார். விஸ்பரூபம் படம் பிரச்னை வந்த போது அம்மா எல்லா தியேட்டர்களிலும் வெளியிட வைத்து லாபம் ஈட்டி கொடுத்தார். அவர் மறைந்த பிறகு இப்படி பேசுகிறார். நன்றிக்கெட்டவர் கமலஹாசன்.
இந்த ஆட்சியில் என்ன குறை கண்டுபிடித்தீர்கள். இரண்டு கப்பல்கள் மோதி கடலில் ஆயில் கலந்த போது மீனவர்களுக்காக அத்துறையின் அமைச்சர் கேட்டுக்கொண்டதன் பேரில் 15 கோடியில், 30 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பேசினார்.