லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து முடித்துள்ள ' விக்ரம் ' படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இப்படம் வெளிவர இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்திற்கான ப்ரோமோஷனை மும்பை, டெல்லி மற்றும் கொச்சியில் கமல்ஹாசன் செய்து வருகிறார்.  மேலும் கமல்ஹாசன் இன்று நடிகர் ரஜினிகாந்தை சென்னையில் சந்தித்திருக்கிறார். கமல்ஹாசனுடன் இப்படத்தில் ஃபஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து ஒரு பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  அதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் கேமியோ ரோலில் நடிக்கிறார்.  இவ்வளவு சிறப்பான நடிகர்கள் நடித்திருக்கும் இந்த படத்திற்கு டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | என் பெயரில் மோசடி நடக்கிறது ஏமாறாதீர்கள் - குக் வித் கோமாளி புகழ்


இப்படம் பற்றி இயக்குனர் நிறைய பேட்டிகளை கொடுத்து வருகிறார்.  அந்த வகையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் கமல் விரைவில் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றப் போவதாக தெரிவித்ததுள்ளார்.  நடிகர் சிவகுமார் தனக்கு அண்ணன் போன்றவர் என்றும், அவரது மகன் சூர்யாவும் என்னை மாமா என்பதை விட மூத்த சகோதரனாகவே கருதுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  அவர் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் சூர்யாவை வைத்து ஒரு படத்தை தயாரிப்பது குறித்து நீண்ட காலமாக யோசித்து வருவதாகவும், 'விக்ரம்' படத்திற்காக சூர்யாவை அணுகியபோது அவர் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


மேலும் பேசியவர், இவ்வாறு சூர்யா உடனே ஒப்புக்கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும், விரைவில் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த 'விக்ரம்' படம் ஜூன்3ம் தேதி ஐந்து மொழிகளில் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


மேலும் படிக்க | ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தின் டைட்டில்! - தலைப்புக்கு இதுதான் ரீஸனா?!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR