தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இவற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் கூறி வருகின்றனர்.  எனினும் மாநிலத்தில் டெங்கு மரணங்கள் தவிர்க்க முடியாதவையாக இருந்து வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் டெங்கு காய்ச்சலுக்கு கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவன் பார்கவ் பலியாகியுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


'செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யா அரசு அகல வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


 



 


அரசு தூங்குகிறது பெற்றோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர் என்றும் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.


 



 


இவ்வாறு டிவீட் செய்துள்ளார்.