மலர் டீச்சர் பார்க்க ஆசையா? ஏப்ரல் 22 ஆம் தேதி ரெடியாகுங்க
விஜய் டிவியில் வெற்றி பெற்ற தொடரான கனா காணும் காலங்கள் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெப்சீரிஸாக வெளிவருகிறது.
2006 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்வில் இரண்டற கலந்து, மறக்க முடியாத நினைவுகளை தந்த தமிழ் தொடர் “கனா காணும் காலங்கள்”. தொலைக்காட்சி உலகில் எண்ணற்ற சாதனைகளை படைத்திட்ட இந்த தொடர், ஒரு தொடருக்கான புது இலக்கணத்தையே படைத்தது. பிரமாண்ட வெற்றி பெற்ற இத்தொடரில் நடித்த நடிகர்கள் பின்னர் திரைத்துறையிலும், தொலைக்காட்சி ஊடக துறையிலும் நுழைந்து, வெவ்வேறு பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள்.
மேலும் படிக்க | ஜெய்யின் புதிய படம் - ஒரு கோடி ரூபாயில் கார்கோ விமான செட்
தமிழ் திரையில் பல சாதனைகள் படைத்திட்ட இத்தொடர் புத்தம் புது பொலிவுடன், புது அத்தியாயங்களுடன், புதிய நட்சத்திர பட்டாளத்துடன் மீண்டும் உருவாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் 2022 ஏப்ரல் 22 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது. இந்த வெப்சீரிஸ் கதை சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இருக்கும் சிறகுகள் மேல்நிலைப்பள்ளியில் கதை நடைபெறுகிறது.
அந்த பள்ளி நிறுவனர் திரு.சக்திவேல், கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியை வெற்றிகரமாக நடத்தி, பல தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு உதவுகிறார். லாக்டவுனுக்குப் பிறகு பள்ளியை திறக்கும் அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. குறைவான மாணவர் சேர்க்கை காரணமாக பள்ளியை மூட அவர் நினைக்கும்போது, ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து பள்ளியை காப்பாற்றுகிறார்கள் என்பதே கதை. காதல், நட்பு என அனைத்து அம்சங்களும் இந்த வெப்சீரிஸில் இருக்கும்.
ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸாரில் ஒளிபரப்பாக உள்ளது. நடிகர் ராஜ்மோகன் பிடி மாஸ்டராக நடிக்கிறார். இதற்கு முன்னர் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த பிக்பாஸ் ராஜூ, பாலா சரவணன், ரியோ ராஜ் ஆகியோர் இந்த தொடர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், மக்கள் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | நாகசைதன்யா மீண்டும் திருமணம் செய்து கொள்கிறாரா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR