பேய்ப் படத்தை புது தோற்றத்தில் காமித்தவர் ராகவ லாரன்ஸ். அதில் ராகவா லாரன்ஸின் முதல் பேய் படம் ‘முனி’. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் பின் தொடர்ந்து இரண்டு, மூன்றாம் பாகங்களை எடுத்து வந்தார். தற்போது ‘முனி 4’ (காஞ்சனா 3)  பாகத்தை  எடுக்கப் போகிறார்.


இந்தப் படத்தில் மொத்தம் 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்களாம். ஒரு பிரபல நடிகையும், இரண்டு புதுமுக ஹீரோயின்களும் நடிக்க இருக்கின்றனர் என்று படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர்.


அந்த வகையில் தற்போது பிக் பாஸ்ஸில் பிரபலம் ஆன நடிகை ஓவியா, காஞ்சனா 3 படத்தில் முன்னணி நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பிக் பாஸ்லிருந்து வெளியே வந்த பிறகு நடிகை ஓவியாவுக்கு சினிமா துறையில் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.